“பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை குவிக்கும் சாய் பல்லவி, காளி வெங்கட்டின் “கார்கி” திரைப்படம்”!!

வெளியிட்டது

2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான படம் “பிரேமம்”. நிவின் பாலி கதாநாயகனாக  நடிக்க அவருக்கு ஜோடியாக படத்தில் 3 நாயகிகள் நடித்து இருந்தனர். அதில் குறிப்பாக காலேஜ் பருவத்தில் நிவினுக்கு டீச்சராக நடித்த எந்த வித மேக்-ஆப்பும், ஆர்ப்பாட்டமான நடிப்பு இன்றியும் சாதாரணாமாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளை கொண்டார் நடிகை சாய் பல்லவி.

"பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை குவிக்கும் சாய் பல்லவி, காளி வெங்கட்டின் "கார்கி" திரைப்படம்"!! 1

அதிக மேக்கப், பயங்கர கிளாமர் இருந்தால் தான் ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக இருக்க முடியும் என்பதை மாற்றி, சாதாரணமாக தாவணி சேலையில் தோன்றிய ஒரே படத்தில் தென்னிந்திய முழுவதும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளங்களை உருவாக்கினர். நடனம் நன்றாக ஆட தெரிந்ததால் நடிக்கும் படங்களில் அதுவும் கை கொடுக்க, அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்துவருகிறார்.

இப்போது சாய் பல்லவி மற்றும் காளி வெங்கட் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் “கார்கி”. வருகிற 15ஆம் தேதி படம் வெளிவரவுள்ள நிலையில், இந்த படத்தின் பத்திரிகையாளர்களின் ஷோ சமீபத்தில் நடந்துள்ளது. நடிகர் சூர்யாவின் 2D நிறுவனம் சார்பில்  இந்த படம் தமிழகமெங்கும் வெளியாகவுள்ளது. படத்தை பார்த்துள்ள பத்திரிகையாளர்கள் சிலர் படத்தை மிகவும் பாராட்டி வருகிறார்கள்.

குறிப்பாக நடிகை சாய் பல்லவியின் மற்றும் காளி வெங்கட்டின் நடிப்பும் நல்ல பாராட்டுகளை அள்ளி வருகிறது. தவறான குற்றம் செய்த ஒன்றிக்காக கைதாகும் தன்னுடைய தந்தையை காப்பாற்ற போராடும் ஒரு பெண்ணும், திக்கி திக்கி பேசும் ஒரு வக்கீலின் வாழ்க்கையை சுற்றி இந்த படம் உருவாகியுள்ளது. ஒரு கோர்ட் ரூம் ட்ராமா ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை நடிகர் நிவின் பாலி நடிப்பில் வெளியான “ரிச்சி” படத்தை இயக்கிய கௌதம் ராமசந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழிகளிலும் நாளை வெளிவரவுள்ள நிலையில், இப்பொது செய்தியாளர்களின் பாராட்டுகளை மிகவும் கவர்ந்த படமாக மாறியுள்ளது, நாளை ரசிகர்களை படம் பார்க்க மிகவும் உந்துகோலாக இருக்கும் என கூறப்படுகிறது. தொடர்ந்து ஜெய் பீம், சூரரை போற்று போன்ற சிறப்பான படங்களை கொடுத்து வரும் சூர்யாவிற்கு மேலும் இந்த படம் நல்ல வாழ்த்துக்களை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்