Categories: சினிமா

படம் வேற லெவெல்ல இருக்கு.! விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா வெறித்தனமா நடிச்சு இருக்காங்க.!

வெளியிட்டது

நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் கட்டாகுஸ்தி. இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், இது குறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை முன் வைத்திருக்கின்றனர். இயக்குனர் செல்லா அய்யாவு இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து காளி வெங்கட், முனீஸ் காந்த், ரெட்டிங் க்ங்ஸ்லி போன்றவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்தப் படத்தை விஷ்ணு விஷால் மற்றும் ரவி தேஜா ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்க, உதயநிதி ஸ்டாலினின் வெப்சைட் மூவிஸ் இந்த திரைப்படத்தை வெளியிடும் உரிமையை பெற்று இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.! 

படம் வேற லெவெல்ல இருக்கு.! விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா வெறித்தனமா நடிச்சு இருக்காங்க.! 1

விஷ்ணு விஷாலை பொருத்தவரை வித்தியாசமான கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த எஃப்ஐஆர் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அவர் இதே போன்ற படங்களில் நடிப்பதில் ஆர்வம் கட்டி வருகிறார். தற்போது குஸ்தி சண்டையை மையமாகக் கொண்ட இந்த படத்தில் அவர் நடித்திருக்கிறார். இந்த படம் குறித்த விமர்சனங்களை பொதுமக்கள் தற்போது கொடுத்து வருகின்றனர். அதில் மக்களுக்கு நல்ல என்டர்டைன்மென்ட் ஆக இருக்கிறது. காமெடி காட்சிகள் நிறைய இடங்களில் வருவதால் படத்தை பார்க்கலாம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் விஷ்ணு விஷால் தனது கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் என்றும், சண்டைக் காட்சிகள் மிக நன்றாக வந்திருப்பதாகவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


ஒரு பெண்ணின் சுதந்திரத்தை அவர்களின் கஷ்டங்களை வித்தியாசமான முறையில் காட்சிப்படுத்தி இருப்பதாகவும், இரண்டாம் பாதியில் மிகச் சரியாக சொல்ல வந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும் மக்கள் கருத்து தெரிவித்தனர் அவர்களின் கருத்துக்களை நீங்களும் காண..! Watch the below video..!

YouTube Video Code Embed Credits: Bingoo Box

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்