கட்டா குஸ்தி.. மகத்தான வெற்றி.! படத்தின் முழு விமர்சனம் இதோ .! Tamilglitz Rating (?/5)

வெளியிட்டது

இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கத்தில் இன்று வெளியாகிஇருக்கும் படம் தான் கட்டாகுஸ்தி. இந்த படத்தின் பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில், படத்தைப் பற்றிய முழு விமர்சனத்தை தற்போது காணலாம். பொள்ளாச்சியில் 20 ஏக்கர் விவசாய நிலத்திற்கு சொந்தக்காரர் தான் படிக்காதவரான விஷ்ணு விஷால். இவர் வீரா என்கிற கதாபாத்திரத்தில் வருகிறார். இவருக்கு தனக்கு வரப்போகும் மனைவி குறித்து சில கண்டிஷன்கள் இருக்கிறது. அதாவது பெண்ணுக்கு முடி இடுப்பு வரை இருக்க வேண்டும், தன்னைவிட குறைவாக படித்திருக்க வேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷன். ஆனால் சில நிர்பந்தங்களால் கேரளாவை சேர்ந்த பாலக்காட்டில் இருந்து கட்டா குஸ்தி வீராங்கனையான நன்கு படித்தவரான, தலைமுடி கம்மியாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியஐ அவருக்கு பொய் சொல்லி திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.

கட்டா குஸ்தி.. மகத்தான வெற்றி.! படத்தின் முழு விமர்சனம் இதோ .! Tamilglitz Rating (?/5) 1

விஷ்ணு விஷாலின் மாமா கதாபாத்திரத்தில் வரும் கருணாஸின் ஆலோசனைப்படி மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைக்கிறார் விஷ்ணு விஷால். அப்படி இருக்கையில் ஒரு கட்டத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஐஸ்வர்யா லட்சுமி பற்றிய உண்மைகள் தெரிய வருகிறது. அதன் பின்பு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி கதை. முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நிகராக இந்த படத்தின் இடைவேளை காட்சி அமைந்துள்ளது. கதாநாயகனுக்கு சரிசமமாக கதாநாயகிக்கும் இடம் அளித்து ஒரு படம் வெகு நாட்களுக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது என்றால் அது கட்டாகுஸ்தி தான். படிக்காத கிராமத்து இளைஞராக மிக நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் விஷ்ணு விஷால். தனது மாமா பேச்சை கேட்டுக் கொண்டு மனைவியை அடக்கி ஆள வேண்டும் என்கிற கதாபாத்திரத்தில் அற்புதமாக பொருந்திப் போயிருக்கிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்து ரசிகர்களை கட்டிப்போட்ட ஐஸ்வர்யா லட்சுமி கட்டாகுஸ்தி வீராங்கனையாக இந்த படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். ஆரம்பத்தில் ஆண்கள் போல் இருக்கும் இவர், தலைமுடி வைத்துக்கொண்டு புடவையில் தோன்றும் காட்சிகள் கைதட்டல்களை பெறுகிறது. ஐஸ்வர்யா பற்றிய உண்மைகளை எப்போது விஷ்ணு விஷால் தெரிந்து கொள்ளப் போகிறார் என்ற பரபரப்பு நொடிக்கு நொடி நம்மை இருக்கையின் நுனியில் அமர வைக்கிறது. விஷ்ணு விஷால் உண்மையை தெரிந்து கொள்ள போகும் காட்சியை இடைவெளியாக வைத்திருப்பது மிக அருமையாக வந்திருக்கிறது. ஐஸ்வர்யா லட்சுமியின் குஸ்தி காட்சிகளை பார்த்த பின்பு இன்னும் எத்தனை பெண்கள் குஸ்தி கற்றுக் கொள்ளப் போகிறார்களோ என்ற எண்ணம் நமக்குள் ஏற்படாமல் இல்லை.

விஷ்ணு விஷாலின் மாமாவாக வரும் கருணாஸ், விஷ்ணுவின் வக்கீல் நண்பராக வரும் காளி வெங்கட், ஐஸ்வர்யாவின் சித்தப்பாவாக முனீஸ்காந்த்ஆகியோர்கள் தங்களது பங்கை மிக அழகாக செய்திருக்கின்றனர். சில காட்சிகளில் வந்தாலும் சிரிப்பை ஏற்படுத்துகிறார் ரெட்டிங் கிங்க்ஸ்லி. ஏத்தி விடும் மாமா கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பான ஒரு பதிலடி கொடுக்கிறார். அதுவே படத்தின் திருப்புமுனையாக அமைகிறது. பின்னணி இசை, பொள்ளாச்சியின் அழகு, பாலக்காட்டின் அழகு என இரண்டு இடங்களிலும் ஒளிப்பதிவு மிக அருமையாக இருக்கிறது. முதல் பாதியில் கலகலப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த படம், இரண்டாவது பாதையில் சென்டிமென்ட் காட்சிகளாக மாறிவிடுகிறது. மற்ற நாடுகளில் போட்டியில் ஜெயிக்க எதிரிகளுடன் சண்டை போட வேண்டும், இங்குதான் முதலில் குடும்பத்துடன் சண்டை போட வேண்டும் என்ற வசனங்கள் பெண்களின் வலிகளையும், எதார்த்தங்களையும் பிரதிபலிக்கின்றன. கருணாஸ் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பெண் பேசும் வசனங்கள் தெறியாக இருக்கின்றன.


மொத்தத்தில் இந்த ஆண்டின் இறுதியில் நல்ல ஒரு கதை களத்துடன் கட்டாகுஸ்தி வெளியாகி இருக்கிறது. படத்தின் நெகட்டிவ் விஷயங்களாக எதுவுமே சொல்ல முடியாத அளவிற்கு படம் அமைந்திருக்கிறது. பெண்களை உயர்வு படுத்தி அவர்களை உத்வேகப்படுத்தும் இரண்டாவது சிங்கப்பெண்கள் பாடலுக்கு உரிய படமாக கட்டாகுஸ்தி அமைந்திருக்கிறது என்று சொன்னால் அது மிகையில்லை.

கட்டா குஸ்தி உறுதியான வெற்றி.. படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 4.0/5

Youtube Video Code Embed Credits: Saregama Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்