நேற்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் படமான கட்டா குஸ்தி திரைப்படம் குறித்து தற்போது ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கருணாஸ், முனீஷ்காந்த், ரெட்டிங் கிங்க்ஸ்லி போன்ற பல முண்ணனி நடிகர்கள் நடித்திருந்த படம் தான் கட்டா குஸ்தி. இந்த படத்தை இயக்குனர் செல்ல அய்யாவு இயக்கியிருந்தார். படம் வெளியான முதலே பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது ப்ளூ சட்டை மாறனும் அது போன்று பாசிட்டிவ் விமர்சனங்களையே முன் வைத்திருக்கிறார். படிக்காத விஷ்ணு விஷாலுக்கு தன்னைவிட குறைவாக படித்த, முடி நீளமாக இருக்கின்ற பெண்தான் வேண்டும் என்று தனக்கு வரப்போகும் மனைவி குறித்து பல டிமாண்டுகளை வைத்திருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேரளாவைச் சேர்ந்த நன்கு படித்த, முடி குறைவாக இருக்கும் ஐஸ்வர்யா லட்சுமியை திருமணம் செய்து கொள்கிறார். அதன் பின்பு அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது என்பது குறித்த மீதி கதை தான் கட்டா குஸ்தி. இதில் ஐஸ்வர்யா லட்சுமி ஒரு கட்டாகுஸ்தி வீராங்கனை ஆவார். அவர் கபடி வீரரான விஷ்ணு விஷாலை திருமணம் செய்து கொண்டு எப்படி வாழ்க்கையை செலுத்துகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. தற்போது இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார். அவர் சொல்லும் போது சில குறைகளை தவிர்த்து விட்டு பார்த்தால் இந்த படம் நன்றாக இருக்கும். சண்டை காட்சிகள் காமெடி காட்சிகளை மட்டும் இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.
பெண்களை முன்னிறுத்தும் படம் என்று சொல்லிவிட்டு கடைசியில் கிளைமாக்ஸ் இல் கதாநாயகன் கதையாக இதை மாற்றி விட்டார்கள். கதாநாயகன் சண்டை போட்ட உடனே இது கதாநாயகன் படமாக மாறிவிட்டது. பாக்கியராஜ் படம் போல் வர வேண்டிய இந்த படம் இப்போ ஓகே என்று சொல்கிற அளவிற்கு தான் வந்திருக்கிறது. இருந்தாலும் குடும்பத்தோடு சென்று ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய அளவிற்கு நல்ல காமெடி உடன் இந்த படம் அமைந்திருக்கிறது, என்று பாசிட்டிவ் விமர்சனங்களையே முன் வைத்தார். நீங்களும் அவரின் வீடியோவை காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Tamil Talkies