கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் இருவரின் திருமணம் முடிந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக் மணிரத்தினத்தின் இயக்கத்தில் வெளியான கடல் என்னும் படத்தின் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி கொடுத்தது.

அதன் பின்னர் இவர் சில படங்களில் நடித்தார். குறிப்பாக இவர் தேவராட்டம் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது மஞ்சிமா மோகனுடன் இவருக்கு காதல் மலர்ந்தது. ஆரம்பத்தில் தங்களது காதலை ஒத்துக்கொள்ளாமல் இருந்து வந்த இந்த ஜோடிகள், சில நாட்களுக்குப் பின்பு தாங்கள் இருவரும் காதலிப்பதாக ஒப்புக்கொண்டனர்.
அதை உறுதிப்படுத்தும் விதமாக தங்களது சமூக வலைதள பக்கங்களில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தனர். தொடர்ந்து இவர்களுக்கு எப்போது திருமணம் என்று கேள்வியையும் அவரது ரசிகர்கள் எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும், வருகின்ற நவம்பர் 28ஆம் தேதி தங்களுக்கு திருமணம் என்றும் சென்னையில் எளிமையாக வைத்து திருமணம் நடைபெற இருப்பதாகவும் அறிவித்தனர்.
மேலும் புகைப்படங்களை 12 மணி அளவில் தாங்களே வெளியிட இருப்பதாகவும், பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியிருந்தனர்.
திருமணம் மட்டுமே நடைபெற இருப்பதாகவும், வரவேற்பு நடைபெறவில்லை, திரை பிரபலங்கள் பலரையும் அழைக்கவில்லை. மிக எளிமையாக சென்னையில் வைத்து திருமணத்தை முடிக்க இருப்பதாக கௌதம் கார்த்திக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அவர்களின் திருமணம் இன்று சென்னையில் நடந்து முடிந்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இந்த திருமணத்தில் விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ரஜினிகாந்த், சிவகுமார், மணி ரத்னம், ஆர்ஜெ பாலாஜி, போன்ற பலர் வந்து வாழ்த்தியுள்ளனர்.