நடிகை காயத்ரி ரகுராம் இன்று திருப்பதிக்கு சென்று மொட்டை போட்டு அந்த புகைப்படங்களை தற்போது சமூக வலைத்தளப். பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் தனது பத்து ஆண்டுகால வேண்டுதல் என்றும் அது இன்றைக்கு நிறைவேறி விட்டதாகவும் தற்போது அவர் அந்த புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் நடிகையாகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் தெலுங்கு படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் தமிழில் நடிகர் பிரபுதேவாவிற்கு சார்லி சாப்ளின் படத்தில் ஹீரோயினாக நடித்தார். முதல் படமே வெற்றி படமாக அமைந்தது. பின்னர் இவர் பரசுராம், விசில், விகடன், வானம் போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடித்துக் கொண்டிருந்தபோது தீபக் சந்திரசேகர் என்பவருடன் திருமணம் ஆகி அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தார். பின்னர் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் அவரிடம் இருந்து விவாகரத்துப் பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு குறைந்த காரணத்தினால் பிக் பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு முதல் சீசனிலேயே கலந்து கொண்டார். ஆனால் அங்கு இவரின் பெயர் டேமேஜ் ஆனது தான் மிச்சம். இவர் சேரி என்றும், பிற போட்டியாளர்களை இழிவாகவும் பேசியதால் பலரும் காயத்ரி ரகுராமுக்கு குறைவான வாக்குகளை அளித்து பிக்பாஸிலிருந்து வெளியேற்றி இருந்தனர். பின்னர் அரசியலில் கவனம் செலுத்தி வந்தார். பிஜேபியில் இணைந்து மாநிலப் பொறுப்பையும் பெற்றார்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த அவருக்கு வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பதவி கொடுக்கப்பட்டது. பின்னர் காயத்ரி பாஜக கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செல்களில் ஈடுபட்டதாக நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து பாஜகவில் இருந்து விலகுவதாக காயத்ரி ரகுராம் அறிவித்தார். தொடர்ந்து பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத அரசியல்வாதியாக இருந்து வரும் காயத்ரி ரகுராம் இன்று திடீரென சில புகைப்படங்களை பதிவிட்டார். அதில் தலையில் மொட்டை தலையுடன் நெற்றியில் நாமமும் போட்டுக்கொண்டு மயிலிறகை வைத்துக்கொண்டு அவர் புகைப்படங்களை பதிவிட்டார். இதை பார்த்த பலரும் ஆச்சரியத்தில் இருந்தனர். அதற்கு விளக்கம் அளித்து இருந்த அவர் தனது பத்து வருட வேண்டுதல் இன்று திருப்பதியில் சென்று மொட்டை போட்டுக் கொண்டேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.
அதைப் பார்த்த பலரும் உங்களுக்கு தைரியம் அதிகம். நடிகையாக இருந்து கொண்டு தைரியமாக சென்று கடவுளுக்காக நேர்த்தி கடன் செலுத்தி இருக்கிறீர்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ளது வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O