பாஜக உறுப்பினரும், நடன இயக்குனருமான நடிகை காயத்ரி ரகுராம் திடீரென சூர்யாவை திட்டி ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 1ல் கலந்து கொண்டு சர்ச்சையை கிளப்பியவர் காயத்ரி ரகுராம். பிக்பாஸில் இருந்த போது “சேரி” என்ற வார்த்தையை பயன்படுத்தி பலரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார் காயத்ரி. பிக்பாஸுக்குப் பின்னர் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காத நிலையில் பாஜகவில் இணைந்தார். இணைந்த நாள் முதலே ஏதாவது ஒரு சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் காயத்ரி. அந்த வகையில் தற்போது நடிகர் சூர்யாவை திட்டியும், எச்சரித்தும் அவர் போட்டுள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. சமீபத்தில் வெளியாகி இருந்த ராக்டெரி நம்பி விளைவு படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் சூர்யா. அந்த படத்தில் விஞ்ஞானி நம்பியை பேட்டி எடுக்கும் காட்சியில் அவர் நடித்து இருத்தார்.

இந்த படத்தை மாதவனே இயக்கி நடித்து இருந்தார். இஸ்ரோவில் வேலை பார்த்துக் கொண்டிருந்த விஞ்ஞானி நம்பி நாராயணன் இஸ்ரோவில் திட்டங்களை பாகிஸ்தானுக்கு விற்றதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவரை பணி நீக்கம் செய்தனர். ஆனால் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்று சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றார் நம்பி நாராயணன். அவரின் நிஜ வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க விரும்பிய மாதவன் ராக்டெரி நம்பி விளைவு என்ற படத்தை தானே இயக்கி நடித்தார். அதில் இரண்டாம் பாகத்தில் உண்மையிலேயே நடிப்பில் அசத்தியிருந்தார் மாதவன். நம்பியாகவே வாழ்ந்து இருக்கிறார் என்று பலரும் பாராட்டி வந்தனர். இந்த படம் பல மொழிகளில் வெளியாகி இருந்தது. இந்த படத்தை பார்த்த சூப்பர்ஸ்டார் இந்த கால இளைஞர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் என்று பாராட்டி இருந்தார்.
இந்த படத்தில் நம்பியை பேட்டி எடுப்பது போன்ற ஒரு காட்சி இருக்கும். அதில் தமிழில் பேட்டி எடுப்பவராக சிறப்பு தோற்றத்தில் சூர்யா நடித்து இருந்தார். ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து இருந்தார். ஹிந்தியில் பேட்டியின் முடிவில் நம்பி நாராயணன் ஜெய்ஹிந்த் என்று சொல்ல, பதிலுக்கு ஷாருக்கானும் ஜெய்ஹிந்த் என்று சொல்லுவார். ஆனால் தமிழில் நம்பி ஜெய்ஹிந்த் சொல்லும் போது சூர்யா பதிலுக்கு ஜெய்ஹிந்த் சொல்லியிருக்க மாட்டார். இதை பார்த்துவிட்ட காயத்ரி ரகுராம் பேட்டி ஒன்றில் சூர்யா இந்தியா வாழ்க, ஜெய்ஹிந்த் என்று கூறமாட்டாரா? ஹிந்தி தெரியாத காரணத்தால் அந்த வார்த்தையை சொல்லவில்லையா? எனில் அவருக்கு இலவசமாக ஹிந்தி கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று கூறியிருந்தார்.
தற்போது ஒரு ட்வீட் ஒன்றையும் அவர் போட்டுள்ளார், அதில், “ராக்கெட்டரி படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.. அதேபோன்று மற்ற மொழிகளிலும் அதே வேடத்தில் பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். மற்ற மொழியில் டைலாக்கின் முடிவில் அனைவரும் ஜெய் ஹிந்த் என்று கூறுகிறார்கள். சூர்யா மட்டும் ஜெய்ஹிந்த் சொல்ல மறுத்தது ஏன்? அவர் இந்தியன் இல்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த ட்வீட் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.