தனது மகள் யுகாவுக்கு முதல் முறையாக உணவு கொடுத்த காயத்ரி – யுவராஜ் தம்பதிகள்.! (வீடியோ)

வெளியிட்டது

சின்னத்திரை உலகில் கதாநாயகியாக விளங்கிவரும் நடிகை காயத்ரி யுவராஜ் தனது இரண்டாவது மகளுக்கு முதல் முறையாக கோவிலில் வைத்து அன்னப்பிரசன்னம் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் 2009ம் ஆண்டு வெளியான ‘தென்றல்’ நாடகத்தின் மூலமாக தனது திரைப் பயணத்தை தொடங்கியவர் நடிகை காயத்ரி. அதன் பின்னர் ‘அழகி’, ‘பொன்னூஞ்சல்’, ‘களத்து வீடு’, ‘மெல்ல திறந்தது கதவு’ போன்ற பல நாடகங்களில் நடித்திருக்கிறார்.

தனது மகள் யுகாவுக்கு முதல் முறையாக உணவு கொடுத்த காயத்ரி - யுவராஜ் தம்பதிகள்.! (வீடியோ) 1

பின்னர் 2016ம் ஆண்டு வெளியான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’ யிலும் நடித்திருக்கிறார். தொடர்ந்து ‘அரண்மனைக்கிளி’, ‘சித்தி 2’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘மீனாட்சி பொண்ணுங்க’ ஆகிய சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ‘மிஸ்டர் அண்ட் மிஸ்டர் சின்னத்திரை பார்ட் 3’ நிகழ்ச்சியிலும் தனது கணவருடன் பங்கெடுத்திருக்கிறார். நடன இயக்குனராக இருக்கும் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடனப் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு ‘தருண்’ என்கிற மூத்த மகன் இருக்கும் நிலையில் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு கணவர் பெயரையும் தன் பெயரையும் இணைத்து ‘யுகா’ என பெயர் வைத்துள்ளார் காயத்ரி. இந்த நிலையில் முதன்முறையாக உணவு கொடுக்கும் அன்னப்பிரசன்ன நிகழ்ச்சியை அவர் நடத்தி இருக்கிறார். அந்த வீடியோவை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்