Categories: கல்வி

5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்! அமைச்சர் செங்கோட்டையன்!!

வெளியிட்டது
5 மற்றும் 8 வகுப்புகளுக்கு பொது தேர்வு நடந்தாலும் தேர்ச்சி நிச்சயம்! அமைச்சர் செங்கோட்டையன்!! 1

5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவித்தாலும் 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டம் கோபி அருகே தூக்கநாயக்கன் பாளையத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாலை மேம்பாடு, குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுமானம் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை இன்று நடந்தது. ரூ.11 கோடி மதிப்பீட்டில் நடைபெற உள்ள பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் , ”அரசுப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு, இயல், இசை, நாடகம், ஓவியம் ஆகிய திறமைகளை வளர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.

யோகா, சாலைவிதிகள் ஆகியவற்றுக்காகவும் ஒருநாள் பயிற்சி வழங்கப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். வாரம் ஒருமுறை 90 நிமிடங்கள் இதற்கான பயிற்சி வழங்கப்படும்.

5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வு குறித்து கவலை பட தேவையில்லை. 3 ஆண்டுகளுக்கு அவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவர்” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்