தமிழ்நாடு டெபிட், கிரெடிட் அட்டைகளை பயன்படுத்தி மாதாந்திர பேருந்து பயணச்சீட்டு பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள மாநகரப் போக்குவரத்துக் கழகம், பயணச்சீட்டு மையத்தில் பொதுமக்கள் தங்கள் டெபிட் மற்றும் கிரெடிட் அட்டைகளைப் பயன்படுத்தி பயணச் சீட்டைப் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநகர போக்குவரத்து கழகத்தில் செயல்பட்டு வரும் மாதாந்திர பயண அட்டை விற்பனை மையங்களில் ஒவ்வொரு மாதமும் ஏறத்தாழ 2.61 இலட்ச பயணிகள் நேரடியாக பணம் கொடுத்து தங்கள் பயண சலுகை அட்டையினை பெற்றுக் கொள்கிறார்கள்.
பொதுமக்கள் நலன் கருதி மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மாநகரப் போக்குவரத்துக்கழக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டங்களில் செயல்பட்டு வரும் 29ம் மையங்களிலும் சுவிபிங் மசின் வாயிலாக பணம் செலுத்த வகை செய்யப்பட்டுள்ளது என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.