Categories: சினிமா

மட்ட மட்ட ராஜமட்ட..! இளையதளபதி நடனத்தில் மிரட்டும் GOAT படத்தின் நான்காவது பாடல் வெளியாகியது..!

வெளியிட்டது

தமிழ் சினிமாவில் உச்சத்தில் அமர்ந்து இருக்கும் நடிகர் விஜய். இவர் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து உள்ளார். இவருடன் நடிகை சினேகா, மீனாட்சி சௌத்திரி, மோகன் , பிரசாந்த் , பிரபுதேவா என பலரும் நடித்து உள்ளனர். ஏஜிஎஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற 5ஆம் தேதி வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மட்ட மட்ட ராஜமட்ட..! இளையதளபதி நடனத்தில் மிரட்டும் GOAT படத்தின் நான்காவது பாடல் வெளியாகியது..! 1

அண்மையில் படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று இருந்தது. இப்படத்திற்கு இவரது ரசிகர்கள் ஆவலுடன் காத்து இருக்கும் நிலையில், படத்தின் நீளம் 3 மணி நேரம் என தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் தளபதி ரசிகர்கள் மிகப்பெரிய ஆவலுடன் காத்து உள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.

இளையதளபதி நடனமாடும் இப்பாடலை விவேக் எழுதியுள்ளார். இப்பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. பிற பாடல்களை விட இப்பாடல் தளபதி ரசிகர்களை அதிகம் கவர்ந்து உள்ளது. வெளியாகி சில நேரத்திலேயே இப்பாடல் 1மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்து இருக்கிறது. ரசிகர்கள் இப்பாடலை கொண்டாடி வருகின்றனர்.

Embed Video Credits : T SERIES

வெளியிட்டது

புதிய செய்திகள்