வங்க கடலில் உருவாகியுள்ள அசானி புயல் காரணமாக ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் பகுதியில் கடலில் தங்க தேர் ஒன்று மிதந்து வந்து கரை ஒதுங்கியுள்ளது. இதை அப்பகுதி மக்கள் மீட்டு ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பாக தென்கிழக்கு வங்காள விரிகுடா பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி பின் புயலலாக உருவானது. அதற்கு அசானி என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இது மெல்ல நகர்ந்து ஆந்திர பகுதியில் மையம் கொண்டுள்ளது. கீழே உள்ள வீடியோவை பாருங்கள்..!

இந்த புயலால் ஆந்திரா மற்றும் வட தமிழகத்தில் வெப்பம் வெகுவாக குறைந்து நல்ல மழை பெய்து வருகிறது. கோடை வெப்பத்திலிருந்து சென்னை வாசிகளுக்கு ஓய்வை கொடுத்துள்ளது அசானி புயல். இந்த புயலால் கடற்கரை ஓரங்களில் மணிக்கு 80 முதல் 100 கிமீ காற்று வீசிக் கொண்டு உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் தூரத்தில் தங்க நிறத்தில் ஏதோ மிதந்து வருவது போல் தெரிந்தது. சிறிது நேரத்தில் கரையை நெருங்கும் போது அது தங்க நிறத்திலான தேர் போன்ற வடிவத்தில் இருந்தது. கரையை நெருங்கியதும் மீனவர்கள் அந்த தேரை கரைக்கு இழுத்து வந்தனர். இந்த தகவல் கடலோர காவல்படைக்கு தெரிவிக்கப்பட்டு அவர்கள் அந்த தேரை பார்வையிட்டனர். அதில் வேற்று மொழியில் எழுத்துக்கள் எழுதப்பட்டு இருந்தன. Youtube Video Code Embed Credits: Polimer News
ஜப்பானிய கலைவடிவமான வாயோ ஸ்டைலில் இருந்ததால் இது ஜப்பானில் இருந்து அடித்து வரப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த தேரில் 16-01-2022 என எழுதப்பட்டு இருந்தது. புயல் காரணமாக எங்கிருந்தோ அடித்து வரப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது உண்மையான தங்கமா என்பது தெரியவில்லை. கடலோர காவல்படை மீட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அந்த வீடியோவை நீங்களும் காண.. WATCH THE BELOW VIDEO..