“கௌரவத்திற்கு கௌரவம் சேர்த்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்”!! கமலுக்கு கோல்டன் விசா அளித்துள்ளது”!!

வெளியிட்டது

4 ஆண்டுகள் இவர் நடிக்கவில்லை இது மிக பெரிய கம்பேக் என ரசிகர்கள் பொதுவாக கூறினாலும், உண்மையில் தசாவதாரம் படத்திற்கு பிறகு நடிகர் கமல் பெரிய வெற்றியை பெறவில்லை. விஸ்வரூபம் நல்ல வெற்றியை பெற்றபோதிலும் அது ஒரு கமர்சியல் படமாக இல்லாமல் வேறு ஒரு பாணியில் கமல் படமாக்கி வெற்றி கண்டார்.

"கௌரவத்திற்கு கௌரவம் சேர்த்துள்ள ஐக்கிய அரபு அமீரகம்"!! கமலுக்கு கோல்டன் விசா அளித்துள்ளது"!! 1

அந்த போட்டியில் ரஜினி அடுத்தடுத்து பல கமர்சியல் படங்களை அடுத்தடுத்து கொடுத்து மிகவும் முன்னே சென்றார். இன்றைய தலைமுறையும் ஒரு மிக பெரிய கமர்சியல் நாயகனாக இருந்த கமலை கொண்டாட தவறியது. அனைத்திற்கும் முற்றுபுள்ளி வைத்து தமிழ் மட்டுமின்றி தென்னிந்தியாவே கொண்டாடும் படமாக இப்பொது “விக்ரம்” படம் உருவெடுத்துள்ளது. படம் வெளியாகி ஒரு மாத காலம் நெருங்கியுள்ள நிலையில் உலகளவில் 400 கோடி  வசூலை ஈட்டி இன்னும் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பல வெற்றி கொண்டாட்டங்களிலும், நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வரும் கமல்ஹாசன். எப்போதும் தன்னுடைய சினிமாவின் மீது கொண்ட காதலாலும், புது புது விஷயங்களை செய்து காட்டிவரும் கமல் இந்தியாவில் அதுவம் தமிழகத்தை சேர்ந்த நடிகராக இருப்பது நமக்கு பெருமையே. இப்பொது ஒரு சம்பவம் நடிகர் கமலுக்கு பெருமையை கொடுத்தவுள்ளது.

பல்வேறு நட்சத்திரங்களுக்கும் “Golden Visa” அளித்துவரும் ஐக்கிய அரபு அமீரகம் இப்போது நடிகர் கமலுக்கும் அந்த அங்கீகரத்தை அளித்துள்ளது. இந்த விசாவின் முழக்கி எப்போது வேண்டுமாலும் இதனை வைத்துள்ளவர்கள் அந்த நாட்டிற்கு சென்று எவ்வளவு காலம் வேண்டுமானாலும் செலவுவழிக்கலாம். இந்த பெருமையான விசா இப்பொது கமலிற்கும் வழங்கப்பட்டுள்ளது.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி நடிகர் கமலிற்கு மிக பெரிய ஊக்கத்தை கொடுத்துள்ளது என்றே சொல்ல வேண்டும். சில காலமாக துவண்டு போய் காணப்பட்ட அவர் இப்பொது மீண்டும் சுறுசுறுப்பாக போது சேவைகளிலும், படங்களிலும் நடிக்க துவங்கியுள்ளார். விக்ரம் படத்தின் அடுத்த பாகம் ஆரம்பிக்கப்படும் அதற்கும் இவர் தான் இயக்குனர் என லோகேஷை காட்டி ஏற்கனவே கமல் அறிவித்திருந்தார்.

அண்மையில் நின்று போன இந்தியன் 2 படம் துவங்கப்படும் என தயாரிப்பாளர் உதயநிதி அறிவித்திருந்தார். அதே போல கமல் அடுத்ததாக மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மகேஷ் நாராயணன் அண்மையில் வெளியான “மாலிக்” என்ற ஃபகத் ஃபாசில் படத்தின் இயக்குநனராவார். அடுத்து பா.ரஞ்சித் ஏற்கனவே கமலுடன் இணைய போகுற செய்தியும் ஏற்கனவே வெளியானது.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்