உருது கவிஞர் கைஃபி ஆஸ்மியை சிறப்பு செய்த கூகிள்!

உருதுக் கவிஞர் கைஃபி ஆஸ்மி என்ற சய்யீத் அத்தர் ஹுசைன் ரிஸ்வியின் 101 ஆவது பிறந்த நாளையொட்டி ஆஸ்மியின் படத்தை வெளியிட்டு  மரியாதை செலுத்தியிருக்கிறது கூகுள்.

கூகிள் டூடுல் அவ்வப்போது உலகின் தலைசிறந்த நிகழ்வுகள் அல்லது தலைசிறந்த மனிதர்களின் பங்களிப்பை நமக்கு நினைவு கூறும் வகையில், அதனை பற்றிய கட்டுரைகள் கூகிள் பக்கத்தில் இடம்பெறும்.

உருது கவிஞர் கைஃபி ஆஸ்மியை சிறப்பு செய்த கூகிள்! 1
உருது கவிஞர் கைஃபி ஆஸ்மி

இந்தவகையில், பிரபல உருது கவிஞரான கைஃபி ஆஸ்மியின் படத்தை கூகிள் தேடுபொறியில் இடம்பெற செய்துள்ளது கூகிள்.

கவிதை, கட்டுரை, பாலிவுட் பாடல்கள் மற்றும் திரைக்கதைகள் என இவரின் பங்களிப்பு அதிகம். 20-ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த கவிஞராக விளங்கியவர் ஆவார்.

1919-ஆம் ஆண்டு இதே நாளில் அஸ்மார்க் மாவட்டம் உத்திரபிரதேச மாநிலத்தில் பிறந்தார். தன்னுடைய 11-ஆம் வயதில் முதல் கவிதையை ‘கசல் ஸ்டைல்’ என்ற தலைப்பில் எழுதினார்.

பின்னர், தற்போதைய மும்பை நகருக்கு குடிபெயர்ந்த அவர் உருது மொழி பத்திரிக்கையில் எழுத்தாளராக பணிபுரிந்துள்ளார்.

தனது வாழ்நாளில், மூன்று ஃபிலிம்ஃபேர் விருதுகள், எழுத்து மற்றும் இலக்கிய துறையில் பத்மஸ்ரீ போன்ற விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்