சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக கூறி கோபி மற்றும் சுதாகரின் பரிதாபங்கள் சேனலை தடை செய்ய வேண்டும் என்று தற்போது சிலர் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் தலையாயப் பிரச்சினையாக மாறிப் போயிருக்கிறது தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் பிரச்சனை. கூலி தொழிலாளிகளாக வட இந்தியாவில் இருந்து தமிழகத்திற்கு படையெடுத்து வருவதும், பேருந்து மற்றும் ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளில் ஏறி அமர்ந்து கொண்டு தமிழ்நாட்டில் பயணிக்கும் பயணிகளுக்கு தொந்தரவு கொடுப்பதுமாக வட இந்தியர்களின் பிரச்சினை நாளுக்கு நாள் அதிகப்பட்டு கொண்டே இருந்தது. இந்த பிரச்சனையை ஊடகங்களும் பெரிதாக காட்டத் தொடங்கிய நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகையை கொண்டாடுவதற்காக வட இந்தியர்கள் பெரும் கும்பலாக ரயில்களில் பயணமாக தொடங்கினர் .இந்த வீடியோவை எடுத்து சில விஷமிகள் தமிழ்நாட்டில் வட இந்தியர்கள் தாக்கப்படுவதாகவும், அதனால்தான் பலரும் தமிழ்நாட்டை விட்டு சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும் பொய்யான தகவல்களை பரப்பினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் வட இந்தியாவில் இருக்கும் ஒரு பத்திரிகை தமிழகத்தில் 15 வட இந்தியர்களை ஒரு அறையில் அடைத்து வைத்து அவர்களை சித்திரவதை செய்து 15 பேரையும் உயிரோடு எரித்து கொலை செய்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பினர். இதனால் வட இந்தியாவில் பதற்றம் அதிகமானது. மேலும் அங்கு வசிக்கும் தமிழர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவியது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் பதட்டமான சூழல் உருவாகத் தொடங்கியது. இதையடுத்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை அவர்கள் இங்கு பாதுகாப்பாக இருப்பதாக அறிக்கை வெளியிட்டார். மேலும் ரயில்களில் பயணம் செய்யும் வட மாநில தொழிலாளர்களிடம் பேட்டி எடுத்தபோது, நாங்கள் தமிழகத்தில் பாதுகாப்பாக இருக்கிறோம். தமிழர்கள் தங்களை அன்பாக நடத்துகிறார்கள், எந்த பிரச்சினையும் இல்லை, ஹோலி பண்டிகைக்காக தங்கள் சொந்த ஊருக்கு செல்கிறோம். விரைவில் தமிழகத்திற்கு திரும்பி விடுவோம் என்று பேசியிருந்தனர். இதன் பின்னர் ஓரளவிற்கு பதற்றம் தணிந்தது. இந்த நிலையில் வடமாநிலத்தவர்கள் குறித்து வீடியோ வெளியிட்ட கோபி, சுதாகர் சேனலை முடக்க வேண்டும் என்று தற்போது குரல் எழுந்திருக்கிறது.
பரிதாபங்கள் என்கிற youtube சேனலை நடத்தி வருபவர்கள் கோபி மற்றும் சுதாகர். ஆரம்பத்தில் பல தொலைக்காட்சிகளில் வேலை வாய்ப்பு கேட்டு அலைந்த இவர்கள் பின்னர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதில் கடந்த வாரம் அவர்கள் வடக்கு ரயில் பாவங்கள் என்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருந்தனர். அப்போது பல வட இந்தியர்கள் டிக்கட் இல்லாமல் ரயில்களில் ஏறி வருவதையும் தமிழ்நாட்டில் வந்து குறைவான சம்பளத்தில் வேலை பார்ப்பதையும், அதனால் தமிழர்களுக்கு பரிபோகும் வேலை வாய்ப்புகள் பற்றியும் மறைமுகமாகவும் காமெடியாகவும் சில வீடியோக்களை வெளியிட்டு இருந்தனர். இந்த வீடியோ சுமார் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருந்தது. தற்போது வட மாநில தொழிலாளர்கள் குறித்து அவர்கள் வெளியிட்ட வீடியோவிற்கு பின்பு தான் இப்படி ஒரு சூழ்நிலை உருவானது என்றும், அவர்கள் சேனலை தடை செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு கட்டுமானப் பொறியாளர் சங்கத்தின் தலைவர் சீனிவாசன் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.
அதேபோல சில கட்சிகளும் கோபி சுதாகர் youtube சேனலுக்கு தடை விதிக்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கோபி சுதாகருக்கு ஆதரவான சிலரோ அவர்கள் உண்மை நிலைமையை எதார்த்தத்துடன் தான் கூறினார்கள் இவர்கள் சேனலை தடை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்று கோபி சுதாகருக்கு ஆதரவாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். அந்த செய்தியை நீங்களும் காண.! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video.!
Youtube Video Embed Code Credits: Polimer News