Categories: அரசியல்

மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க அவகாசம் கொடுக்க அளிக்க ஆளுநர் மறுப்பு!

வெளியிட்டது
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சி ஆட்சி அமைக்க அவகாசம் கொடுக்க அளிக்க ஆளுநர் மறுப்பு! 1

288 தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. -105, சிவசேனா-56, தேசியவாத காங்கிரஸ்-54, காங்கிரஸ்-44 இடங்களில் வெற்றி பெற்றது.

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மைக்கு 145 இடங்கள் தேவை என்ற நிபந்தனையில் பா.ஜ.க.வும், சிவசேனாவும் ஒன்றுசேர்ந்து ஆட்சி அமைக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி இந்த முறை முதல்-மந்திரி பதவியை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க.வுக்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்தது. இதனால் பா.ஜ.க.வுக்கும், சிவசேனாவுக்கும் புதிய அரசு அமைப்பதில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.

இதற்கிடையே, பா.ஜ.க.வை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல் மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதற்கான கடிதத்தை ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை சந்தித்து அளித்தார். அப்போது மாற்று ஏற்பாடு செய்யும் வரை முதல்-மந்திரி பதவியில் நீடிக்குமாறு தேவேந்திர பட்னாவிசை ஆளுநர் அறிவுறுத்தினார்.இதற்கிடையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

சட்டசபை தேர்தலில் அதிக (105) இடங்களை வென்ற கட்சி பா.ஜ.க. என்பதால் ஆட்சி அமைக்க ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும், சட்டசபையில் நவம்பர் 11-ம் தேதிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நேற்று மாலை தேவேந்திர பட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்.எல்.ஏ.க்கள் ஆளுநரை சந்தித்துள்ளனர்.இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் பட்டில் ‘மகாராஷ்டிராவில் நாங்கள் ஆட்சி அமைக்கப் போவதில்லை’ என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரா தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற்ற இரண்டாவது கட்சி (56 இடங்கள்) என்ற முறையில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சிவசேனாவின் விருப்பத்தை அறியவும் அக்கட்சிக்கு உள்ள பிற எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை தெரிந்துக் கொள்வதற்காகவும் ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்திருந்தார். இன்று இரவு 7.30 மணிக்குள் சிவசேனா தனது முடிவை கூற வேண்டும் என்று ஆளுநர் மாளிகை கெடு விதித்திருக்கிறது.

மும்பை பன்ட்ரா பகுதியில் உள்ள தாஜ் லேன்ட்ஸ் ஓட்டலில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளனர். உத்தவ் தாக்கரேவுடன் அவரது மகன் ஆதித்யா தாக்கரே, சஞ்சய் ராவத் ஆகியோரும் வந்திருந்தனர்.

சுமார் ஒருமணி நேரம் நடபெற்ற இந்த ஆலோசனைக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்க இரு தலைவர்களும் மறுப்பு தெரிவித்தனர். எனினும், மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி அமைந்தால் கடைபிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பொது செயல்திட்டம் தொடர்பாக இன்று ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதற்கிடையில், சிவசேனாவுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் சோனியா காந்தி நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், உத்தவ் தாக்கரே மகன் ஆதித்யா தாக்கரே மற்றும் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலை 6.30 மணியளவில் ஆளுநரை சந்தித்தனர்.

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆதித்யா தாக்கரே, ‘ஆட்சி அமைக்க விரும்புவதாக ஆளுநரிடன் நாங்கள் தெரிவித்தோம். இதற்கு இரண்டு நாட்கள் அவகாசம் அளிக்குமாறு கேட்டோம். ஆனால், ஆட்சி அமைக்கும் உரிமைக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் அவகாசம் அளிக்க மறுத்து விட்டார். எனினும், ஆட்சி அமைப்பது தொடர்பாக எங்களது முயற்சிகள் தொடரும்’ என குறிப்பிட்டார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்