Categories: அரசியல்

மகாராஷ்டிராவில் ஆளுநர் அழைப்பு! சிவசேனா கட்சி ஆட்சி அமைக்குமா!!

வெளியிட்டது
மகாராஷ்டிராவில் ஆளுநர் அழைப்பு! சிவசேனா கட்சி ஆட்சி அமைக்குமா!! 1

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க இரண்டாவது தனிப்பெரும் கட்சியாக விளங்கும் சிவசேனாவுக்கு விருப்பமா என்று கேட்டு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுத்துள்ளது.
மொத்தம் 288 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்து முடிந்துள்ள சட்டப்பேரவை தேர்தலில் பாஜக (105) – சிவசேனா (56) கூட்டணி 161 தொகுதிகளையும், காங்கிரஸ் (44) – தேசியவாத காங்கிரஸ் (54) கூட்டணி 117 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

அம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க 145 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவை என்பதால் பாஜக-சிவசேனா கூட்டணிக்கு ஆட்சி அமைக்க போதுமான எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையிலும் , முதல்வர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்வது, ஐம்பதுக்கு-ஐம்பது என அதிகாரத்தை பிரித்து கொள்வது என்று ஏற்பட்டுள்ள மோதலால் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பதில் அங்கு சிக்கல் நிலவி வருகிறது.

இதனையடுத்து , அதிக இடங்களை கைப்பற்றிய கட்சி என்ற அடிப்படையில் வருகிற 11ஆம் தேதிக்குள் ஆட்சியமைக்க வருமாறு பாஜகவுக்கு மகாராஷ்டிர ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்துள்ளார். எனினும், ஆட்சியமைப்பதில் சிக்கல் உள்ளதால் தயக்கம் காட்டி வருகிறது பா. ஜ. க கட்சி , போதிய அளவு பெரும்பான்மை இல்லாததால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் விரும்பவில்லை என்று அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், 56 இடங்களைக் கைப்பற்றிய 2ஆவது தனிப்பெரும் கட்சியான சிவசேனாவுக்கு மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க விருப்பமா எனக் கேட்டு ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். சிவசேனா சட்டப்பேரவை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஏக்நாத் ஷிண்டேவுக்கு இதற்கான அழைப்பை ஆளுநர் மாளிகை அனுப்பி இருக்கிறது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்