நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகனின் திருமணம் வருகிற 28ஆம் தேதி சென்னையில் வைத்து நடைபெற இருக்கிறது. இன்று செய்தியாளர்களை சந்தித்த கௌதம் மற்றும் மஞ்சிமா இருவரும் இந்த தகவலை உறுதி செய்துள்ளனர். நவரச நாயகன் கார்த்திக்கின் மகன்தான் கௌதம் கார்த்திக். இவர் 2013ஆம் ஆண்டு வெளியான கடல் என்னும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகிற்கு ஹீரோவாக அறிமுகமானார். தனது முதல் படமே மிகப்பெரிய இயக்குனரான மணிரத்னத்துடன் இவர் இணைந்து நடித்திருந்தார். பின்னர் இவர் ரங்கூன், இருட்டு அறையில் முரட்டு குத்து, இவன் தந்திரன் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். ஆனால் எந்த படங்களும் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை தரவில்லை.

தற்போது இவர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். மேலும் 16 ஆகஸ்ட் 1947 என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இவர் தேவராட்டம் என்னும் படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அதன் கதாநாயகியாக இருந்த மஞ்சிமா மோகன் உடன் காதல் மலர்ந்துள்ளது .இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில், சமீபத்தில் அந்த தகவலை அவர்கள் உறுதி செய்திருந்தனர். நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இந்த காதலை இருவரும் உறுதி செய்தனர். மேலும் இந்த மாத இறுதியில் இருவருக்கும் திருமணம் நடக்க இருக்கும் செய்தி தீயாக பரவி வந்த நிலையில், இன்று அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது வருகிற 28ஆம் தேதி தமக்கும் மஞ்சிமாவுக்கும் சென்னையில் வைத்து திருமணம் நடக்க இருக்கிறது. உங்கள் ஆசீர்வாதம் வேண்டும், எளிமையாக தான் திருமணத்தை நடத்த இருக்கிறோம், குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கின்றனர், வரவேற்பு இல்லை, திருமணம் மட்டுமே நடைபெற இருக்கிறது. எங்கள் திருமணத்திற்கு தந்தை கார்த்திக் சம்மதித்து விட்டார் என்று பேசினார். மேலும் தான்தான் முதலில் காதலைச் சொன்னேன், அவர் இரண்டு நாட்கள் கழித்து தான் என் காதலை ஒத்துக் கொண்டார் என்று வெட்கத்துடன் பேசினார் கௌதம். தொடர்ந்து பேசிய மஞ்சிமா திருமணத்திற்கு பின்னர் படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார். அவர்களின் அந்த வீடியோவை நீங்களும் காண..! Watch the below video..!
Youtube Video Code Embed Credits: Newsbeez