கன்னியாகுமரிக்கு கடை திறப்பு விழாவிற்கு சென்ற ஜிபி முத்துவிற்கு முன்னணி நடிகர்களுக்கு இணையாக கூட்டம் கூடி இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர். டிக்டாக் செயலி மூலமாக பிரபலமானவர் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த ஜிபி முத்து. இவர் ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 80 வீடியோவுக்கு மேல் பதிவிட்டு அந்த செயலிக்கு அடிமையாக இருந்தார். பின்னாளில் டிக்டாக் செயலி முடங்கிய பின்னர் instagram மற்றும் youtube பக்கத்தில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். யூடியூப் பக்கம் தொடங்கிய பின்னர் இவருக்கு இவரது ரசிகர்கள் கடிதங்களும், பரிசு பொருட்களும் அனுப்பி வந்தனர். அந்த கடிதங்கள் பல காமெடியாகவும், சில கடிதங்கள் மிக ஆபாசமாகவும் இருந்ததால் அந்த வீடியோக்கள் பலராலும் பார்க்கப்பட்டது. கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

குறுகிய காலத்திலேயே இவர் மிகவும் பிரபலமானதால் இவருக்கு பிக்பாஸில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. சீசன் 6ன் முதல் போட்டியாளராக கலந்து கொண்டார் ஜி.பி.முத்து. ஆனால் இரண்டாவது வாரமே அவர் வீட்டிலிருந்து வெளியேறினார். தனக்கு பணம், புகழை விட குடும்பம்தான் முக்கியம் என்று கூறி மன அழுத்ததில் இருப்பதாகவும் தன்னை வெளியே அனுப்பும்படியும் தொடர்ந்து கூறி வந்ததால், இவரை வீட்டை விட்டு வெளியேறினார். வெளியேறிய பின்பு பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் இன்று கன்னியாகுமரிக்கு ஒரு டயர் கடைக்கு திறப்பு விழாவிற்கு சென்ற அவரை பார்ப்பதற்காக மிகப்பெரிய கூட்டமே திரண்டு இருந்தது. முன்னணி நடிகர்களுக்கு இணையாக அந்த கூட்டம் திரண்டு இருந்தது. அந்த வீடியோவை ஜி.பி.முத்துவே யூடியூப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவை நீங்களும் காண.! Watch the Below Video..!
Youtube Video Code Embed Credits: Gp Muthu official