பிரபல சின்னத்திரை நடிகரும் youtube ஐ கலக்கி வரும் நடிகருமாக இருக்கும் ஜி பி முத்து தற்போது தனது குடும்பத்தினருடன் சென்று உயர் ரக கார்வற்றை வாங்கியிருக்கிறார். கியா கம்பெனி தயாரிக்கும் உயர் ரக கார் ஒன்றை வாங்கி தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு சென்றிருக்கும் வீடியோவை அவர் தனது youtube பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் ஜி.பி முத்துவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்தவர் ஜிபி முத்து. இவர் டிக் டாக் செயலில் இருந்தபோது தொடர்ந்து வீடியோக்களை போட்டு வந்தார். ஆரம்பத்தில் ஜிபி முத்துவை பலரும் விமர்சித்து வந்த நிலையில் பின்னர் அவரது பேச்சுக்காகவே பலரும் அவரை ரசிக்கத் தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் யூடியூப் பக்கம் ஒன்றை தொடங்கிய ஜிபி முத்து தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். அவரது ரசிகர்கள் அவருக்கு அனுப்பிய கடிதத்தை பிரித்து படித்து காமெடி வீடியோக்களாக வெளியிட்டு வந்ததால் அவருக்கு ரசிகர் பட்டாளம் மிகப்பெரிய அளவில் பெருகியது. தொடர்ந்து அவர் பிக்பாஸ், குக் வித் கோமாளி போன்ற தமிழின் முன்னணி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். இதனால் அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் மகிழ்ச்சியில் இருந்தனர் தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வருகிறார் ஜி.பி முத்து. இந்த நிலையில் அவர் இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அதில் குடும்பத்துடன் கியா மோட்டார்ஸ் ஷோரூமுக்கு சென்று புதிய கார் ஒன்றை வாங்கி இருக்கிறார்.
அந்த வீடியோவில் இத்தனை நாள் செகண்ட் ஹேண்ட் கார் தான் வைத்திருந்தேன். அது எங்கள் குடும்பத்திற்கு போதவில்லை, எனவே அனைவரும் ஒன்றாக செல்லும்படியாக புதிய கார் ஒன்றை வாங்கியிருக்கிறேன் என்று சொல்லி அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். நீங்களும் அந்த வீடியோவைக் காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்.! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Gpmuthu Official