பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்பு பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கும் ஜிபி முத்து.!

வெளியிட்டது

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்பு நேராக வீட்டிற்கு சென்ற ஜிபி முத்து உடல்நிலை சரியில்லாத தனது மகனை பார்த்துவிட்டு, தனது நான்கு பிள்ளைகளுக்கும் பிரியாணி வாங்கி கொடுத்து விருந்தே வைத்திருக்கிறார். அந்த நெகிழ்ச்சியான காணொளியை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஜி பி முத்து. தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து. மர ஆசாரியாக இருந்த இவர் கொரோனா காலத்தில் வேலையில்லாத காரணத்தினால், டிக் டாக் செயலியை பயன்படுத்த தொடங்கினார். பின்பு அந்த செயலிக்கு அடிமையான இவர் ஒரு நாளில் 80க்கும் மேற்பட்ட வீடியோக்களை வெளியிட்டு வந்தார். ஆரம்பத்தில் இவர் ஆபாசமாகவும், அதிகமான கெட்ட வார்த்தைகள் பேசியதாலும் இவரை பலரும் வெறுத்தனர். ஆனால் ஜி பி முத்துவின் குடும்ப பின்னணியை தெரிந்து கொண்ட பின்பு பலரும் இவரை ஆதரிக்க தொடங்கினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பிக்பாஸ்ஸில் இருந்து வெளியேறிய பின்பு பிள்ளைகளுடன் சந்தோசமாக இருக்கும் ஜிபி முத்து.! 1

நான்கு பிள்ளைகளுக்கு தகப்பனாக இருந்த ஜிபி முத்துவிற்கு குடும்ப வறுமை வாட்டியது. குழந்தைகளின் கொலுசு, மனைவியின் நகைகள் என அனைத்தையும் பெற்று குடும்பத்தை நடத்தி வந்தார். பின்னால் வறுமை வாட்டிய காரணத்தினால் தற்கொலை முயற்சி கூட செய்து கொண்டார். பின்னாளில் டிக் டாக் செயலிக்கு வந்த பிறகு மக்கள் இவரை சிறிது சிறிதாக ஆதரிக்க தொடங்கினர். டிக் டாக் முடங்கிய பிறகு youtube வலைதள பக்கத்தில் சேனலை தொடங்கி அதில் வீடியோக்களை பதிவேற்றி வந்தார். ரசிகர்கள் அனுப்பும் கடிதத்தை இவர் படிக்கும் வீடியோக்கள் மிகப் பிரபலம். அனைத்து வீடியோக்களும் லட்சக்கணக்கான பார்வையாளர்களை தாண்டுவதும் வழக்கம். இதனால் குறுகிய காலத்திலேயே மிகப் பிரபலமானார் ஜி பி முத்து .தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்தும் வருகிறார்.

இவருக்கு இரண்டாவதாக இரட்டை குழந்தைகள் பிறந்தன. அதில் விஷ்ணு என்ற சிறுவனுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகும். இதனால் மகனை தேடுவதாக கூறி பிக்பாஸில் இருந்து என்னை எப்படியாவது வெளியேற்றி விடுங்கள் என்று கதறி அழுது வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்
ஜிபி முத்து. தற்போது தூத்துக்குடியில் உள்ள தனது வீட்டிற்கு வந்த அவர், பிள்ளைகளுக்கு பிரியாணி வாங்கி கொடுத்து சந்தோஷமாக இருக்கும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்த பலரும் தலைவரே நீங்கள் குழந்தைகளுடன் இருப்பதை பார்க்கும்போது எங்களுக்கு கண்கள் எல்லாம் கலங்குகிறது என்று சொல்லி கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். தகப்பனாக ஜெயித்து விட்டார் ஜி பி முத்து என்றும் அவர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர். ஜி பி முத்து வெளியிட்ட அந்த வீடியோவை நீங்களும் காண.. Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Gp Muthu Official

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்