Categories: சமூகம்

குஜராதில் தலித் பெண் மீது பாலியல் கொடுமை! கொலை!

குஜராத் மாநிலத்தில் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

குஜராத்தின் மொடாசாவில் உள்ள சைரா கிராமத்தில் கடந்த ஜனவரி 5 ஆம் தேதி 19 வயதுடைய தலித் பெண்ணின் சடலம் ஆலமரத்தில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பெண் தனது சகோதரியுடன் மோடாசாவுக்குச் சென்றிருக்கிறார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இது குறித்து அவரது சகோதரியிடம் கேட்கையில் பிமல் பர்வத் என்பவர் அப்பெண்ணை காரில் ஏற்றி போனதாக கூறியுள்ளார்.

குஜராதில் தலித் பெண் மீது பாலியல் கொடுமை! கொலை! 1

இதனையடுத்து, பெண் காணாமல் போன செய்தி அறிந்ததும் காவல்துறையை அணுகியபோது வழக்குப்பதிவு பதிவு செய்ய மறுக்கப்பட்டுள்ளது. மேலும், உடலை கைப்பற்றிய பின்னரும் கூட கற்பழிப்பு என வழக்கு பதிவு செய்யாமல் இழுத்தடித்துள்ளது காவல்துறை.

ஜனவரி 3 ஆம் தேதி, மோடாசா காவல் நிலைய ஆய்வாளர் என்.கே.ரபாரி அப்பெண் தனது சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், திரும்பி வந்துவிடுவார் எனவும் அந்தப் பெண்ணின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

பின்னர், ஜனவரி 5ஆம் தேதி அன்று அந்த பெண்ணின் சடலம் கிடைக்கப்பெற்றதும், சந்தேகிக்கப்பட்ட பிமல் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீது கும்பல் கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கு பதிவு செய்தார்.

தற்போது அப்பெண்ணின் உடல் செவ்வாய்க்கிழமை அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. ஆனால் உடலை பெற்றுக்கொள்ள மறுத்த உறவினர்கள், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, காவல் ஆய்வாளர் ரபாரி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்