பட்ஜெட்க்கு முன்னதாக நிதியமைச்சகம் நடத்தும் ஹல்வா விழா

வெளியிட்டது

மத்திய பட்ஜெட் 2020 க்கு முன்னதாக பாரம்பரிய ‘ஹல்வா’ நிகழ்ச்சி ஜனவரி 20 ஆம் தேதி நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்ச்சி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொள்வார்கள்.

இந்த நிகழ்ச்சி பட்ஜெட்டுக்கான ஆவணங்களை அச்சிடுவதைக் குறிக்கிறது. விழாவின் போது ஹல்வா தயாரிக்கப்பட்டு நிதி அமைச்சின் ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.

பட்ஜெட்க்கு முன்னதாக நிதியமைச்சகம் நடத்தும் ஹல்வா விழா 1

இந்த விழாவைத் தொடர்ந்து அதிகாரிகள் சுமார் 10 நாட்களுக்கு North block Basement செல்கின்றனர். பட்ஜெட் பற்றிய செய்திகள் வெளிய கசியக்கூடாதென்பதற்காக உறுதிப்படுத்த இது செய்யப்படுகிறது.

பட்ஜெட் செயல்பாட்டின் ஒரு பகுதியாக இருந்த அமைச்சின் ஒவ்வொரு அதிகாரியையும் பாராட்டுவதையும் இந்த விழா நோக்கமாகக் கொண்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்வைக்கும் ஏழாவது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் 2020 பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் வெளியிடப்படும்.

Faiyas Khan

தோல்வி உன்னை துரத்தினால் நீ வெற்றியை நோக்கி ஓடு :) நண்பர்களே உங்களக்கு நியூஸ் புடிச்ச ஷேர் பண்ணுங்க Hailing from the bustling streets of Chennai, I bring you the juiciest tidbits and exclusive insights from the heart of Tamil entertainment, because nobody knows the industry like a true Chennaiite.

வெளியிட்டது

புதிய செய்திகள்