ஹன்சிகா மற்றும் சுஹேல் கத்தூரியா திருமண வீடியோ வருகிற பிப்ரவரி 10ம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. அதை ட்ரைலருடன் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது ஹாட்ஸ்டார். வீடியோ வெளியான சில நிமிடங்களில் 7 லட்சம் பார்வையாளர்களை தாண்டியுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஹன்சிகாவின் திருமண வீடியோ ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான டிஸ்னி ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றி இருந்தது. நயன்தாராவை அப்படியே பின்பற்றி ஹன்சிகாவும் தனது திருமண வீடியோவை ஓடிடி தளத்திற்கு விற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் இது குறித்து ஹன்சிகா தரப்பு எந்தவிதமான அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்த நிலையில் தற்போது திருமண வீடியோவின் ட்ரைலரை ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. ட்ரைலர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானி தொழிலதிபரும், தனது நண்பருமான சுஹேல் கத்தூரியா என்பவரை டிசம்பர் 4 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். மங்களூரில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு, மராத்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் சரளமாக பேசக் கூடியவர். மும்பையில் வளர்ந்த இவர் முதலில் தெலுங்கு படம் ஒன்றில் நடித்த தொடங்கினார்.குழந்தை நட்சத்திரமாக படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்தார். 2003 ஆம் ஆண்டு வெளியான ஷக்லக்க பூம்பூம் என்ற தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ்பெற்றார். பின்னர் 2007 ஆம் ஆண்டு தெலுங்கு படம் ஒன்றில் நடித்து இவர் திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்தார்.
சமீபத்தில் அவர் தனது காதலரை அறிமுகப்படுத்தினார். பிரான்சில் உள்ள ஈபில் டவர் முன்பு இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவர்கள் இருவருக்கும் டிசம்பர் நான்காம் தேதி ஜெய்ப்பூர் அரண்மனையில் வைத்து திருமணம் நடைபெற்றது. இவர்களின் திருமண வீடியோ டிஸ்னி hotstar-ல் ஒளிபரப்பு செய்ய இருப்பதாகவும் நயன்தாரா வழியில் தங்களது திருமண வீடியோவை டிஸ்னிக்கு ஹன்சிகா விற்று இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வ ட்ரைலர் வெளியாகியுள்ளது. வருகிற பிப்ரவரி 10ம் தேதி முதல் இந்த வீடியோ ஒளிபரப்பு ஆக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவை பிரபல இயக்குனர் கெளதம் மேனன் தொகுத்து வழங்கியுள்ளார். நீங்களும் அந்த ட்ரைலரை காண கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.! Watch the Below Video..!
Youtube Video Embed Code Credits: Disney + Hotstar