Categories: சினிமா

வயிறு வெடிச்சு இறந்தாரா? தவறான தகவலை பரப்பிய youtube சேனல்கள்.! கதறி அழும் ஹரி மனைவி.!

வெளியிட்டது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த ஹரி வைரவன் குறித்து சில youtube சேனல்கள் தவறான செய்திகள் பரப்பி வருவதாகவும், அதனால் தான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாகவும் ஹரி வைரவனின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்திருக்கிறார். சில youtube சேனல்கள் வருமானத்திற்காக பல பொய்யான தகவல்களை பரப்பி வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். ஒருவரின் புகைப்படத்தை எடிட் செய்து அவர் இறந்து விட்டதாக கூறி பார்வையாளர்களை பெற்று வருகின்றனர் சில யூடியூப் சேனல்கள். அப்படி சில youtube சேனல்கள் இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்த ஹரிபைரவன் குறித்தும் சில தவறான தகவல்களை கொடுத்திருக்கின்றனர். ஹரி வைரவன் வயிறு வெடித்துதான் இறந்தார் என்று தவறான செய்தியை கூறியிருக்கின்றனர். இது குறித்து ஹரி வைரவன் இறப்புக்குப் பிறகு முதல் முறையாக பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் அவரது மனைவி கவிதா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வயிறு வெடிச்சு இறந்தாரா? தவறான தகவலை பரப்பிய youtube சேனல்கள்.! கதறி அழும் ஹரி மனைவி.! 1
38 வயதாகும் ஹரி வைரவன் குள்ளநரி கூட்டம், வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சர்க்கரை வியாதியால் ஒருமுறை கோமாவுக்கு சென்று விட்டார். பின்னர் அவரது மனைவியின் கடுமையான முயற்சியால் அவர் 13 நாட்களில் கோமாவில் இருந்து இயல்பு நிலைக்கு மீண்டார். இருப்பினும் அவரது இரண்டு கிட்னிகளும் செயலிழந்து போன காரணத்தினால், அவர் தன்னை கருணை கொலை செய்து விடுமாறும் பேட்டிகளில் கண்ணீர் மல்க கூறி வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென கை, கால்கள் வீங்கிய நிலையில் அவர் நள்ளிரவு 12 மணிக்கு காலமானார். அவரது இறப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. உதவி கேட்டு பேட்டியளித்து வந்த மனிதர் இப்படி திடீரென்று இறந்து விட்டார் என்ற செய்தி பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது.

ஹரி எவ்வாறு இறந்தார் என்று கவிதா தொடர்ந்து பேட்டிகளிலும், ஹரியின் இறுதி சடங்கிற்கு வந்தவர்களிடமும் விளக்கம் அளித்து வந்தார். ஆனாலும் சில youtube சேனல்கள் தன் வருமானத்தை பெருக்குவதற்காக ஹரி வைரவன் வயிறு வெடித்து இறந்து விட்டதாக தவறான தகவல்களை பரப்பினர். இதுகுறித்து தற்போது பேசியிருக்கும் கவிதா என் கணவர் இறந்த சோகத்தில் இருந்து நான் மீளவில்லை, அதற்குள் இப்படியான செய்தி என்னை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கி இருக்கிறது. என் மகளுக்கு தனது தந்தை இறந்த செய்தி கூட தெரியவில்லை, இரண்டு நாட்களாக அப்பா எங்கே? அப்பா எங்கே? என்று கேட்டுக் கொண்டே இருக்கிறார். மேலும் அஸ்தியை கரைக்க எடுத்துச் செல்லும் போது அப்பா காசிக்கு சென்று இருக்கிறாரா? என்று எனது தாயார் சொன்னதை வைத்து கேட்டுக் கொண்டிருக்கிறார்.

நடிகர் விஷ்ணு விஷால் என் குழந்தையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் பிளாக் பாண்டி உள்ளிட்ட பலர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு ஆறுதல் சொன்னார்கள். அந்த youtube சேனல்களுக்கு எதிராக நீதிமன்றத்தை நாட இருக்கிறேன். இதுபோன்று தவறான தகவல்களை பரப்பாதீர்கள் என்று கவிதா கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தார். நீங்களும் கவிதாவின் அந்த வீடியோவை காண..! Watch the below video..!

Youtube Video Code Embed Credits: Buhari Junction

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்