ஹரிஷ் கல்யாண் பற்றி Biggboss வீட்டில் பொய் சொன்ன விஷ்ணு.! கடுப்பாகி ஹரிஷ் போட்ட ட்வீட்.!

வெளியிட்டது

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு சென்று திரும்பிய நடிகர் ஹரிஷ் கல்யாண் தற்போது பிக் பாஸில் போட்டியாளராக இருக்கும் விஷ்ணு குறித்து ட்வீட் ஒன்றை போட்டு இருக்கிறார். முந்தைய சீசன்கள் போல் அல்லாமல் இந்த முறை பிக் பாஸ் மிகவும் போர் அடித்து வருகிறது. 24 மணி நேர லைவ்வில் கூட எப்பொழுதும் சமைக்கும் இடத்தையே காட்டிக் கொண்டிருக்கின்றனர். சுவாரசியமான எந்த போட்டிகளும் இல்லை. போட்டியாளர்களுக்குள் சண்டை மட்டுமே அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் நடிகழ் ஹரீஷ் கல்யாண் தனது ‘பார்க்கிங்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக மீண்டும் 6 வருடங்கள் கழித்து பிக் பாஸ் இல்லத்திற்குள் நுழைந்திருந்தார். அவருடன் அந்த படத்தில் நடித்தவரும், பூர்ணிமாவின் தோழிமான இந்துஜாவும் உள்ளே வந்திருந்தார்.

ஹரிஷ் கல்யாண் பற்றி Biggboss வீட்டில் பொய் சொன்ன விஷ்ணு.! கடுப்பாகி ஹரிஷ் போட்ட ட்வீட்.! 1
கன்டென்ட் இல்லாமல் தவித்து வந்த பிக் பாஸுக்கு ஹரிஷ் கல்யாணின் வருகை நல்ல கண்டன்ட்டாக அமைந்திருந்தது. ஹரிஷ் கல்யாணும் தான் இந்த வீட்டில் ஒரு நாள் தங்க வேண்டும் என்று பிக் பாஸிடம் கோரிக்கை வைக்க, அதை பிக் பாஸும் ஏற்றுக்கொண்டார். ஒருநாள் கண்டன்ட் கொடுத்த ஹரீஷ் அடுத்த நாளே வீட்டில் இருந்து வெளியேறி விட்டார். ஹரிஷ் கல்யாண் வீட்டுக்குள் வந்த போது எந்த வீடு அவரை மிகவும் ஈர்க்கிறதோ, அவர்களுக்கு ஒரு கோல்ட் ஸ்டார் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஹரிஷ் கல்யாண் இரு வீட்டாரின் நடவடிக்கைகளையும் ஆராய்ந்து அலசி ஸ்மால் பாஸ் வீட்டாருக்கு கோல்டு ஸ்டாரை கொடுத்துவிட்டு சென்றிருந்தார். இந்த நிலையில் இதுகுறித்து ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டிருக்கிறார்.


ஹரீஷ் கோல்டு ஸ்டாரை கொடுத்துவிட்டு சென்ற பிறகு, மணியிடம் சென்ற விஷ்ணு, “ஹரிஷ் கல்யாண் என்னுடைய நண்பர், அதுதான் எனக்கு கோல்டு ஸ்டாரை கொடுத்துவிட்டு போனார்” என பெருமையாக பேசியிருந்தார். இந்த வீடியோவை ரசிகர்கள் எடுத்து ட்விட்டர் இணையதளத்தில் பரப்ப அதை மறு பகிர்வு செய்த ஹரிஷ் கல்யாண், “உஷ்ஷ்ஷ் அப்பா முடியலடா” என்ற கமெண்ட்டை மீமாக போட்டு இருக்கிறார். விஷ்ணு தனது இஷ்டத்திற்கு அடித்துவிட்ட பொய்யை தான் மறைமுகமாக இப்படி ஹரிஷ் கல்யாண் கூறி இருக்கிறார் என்று சொல்லி ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.!

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்