டாக்டர் பட்டம் பெற உள்ள ஹாரிஸ் ஜெயராஜ்! வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்!!

வெளியிட்டது
டாக்டர் பட்டம் பெற உள்ள ஹாரிஸ் ஜெயராஜ்! வாழ்த்து தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான்!! 1

இசை அமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் அவர்கள் டாக்டர் பட்டம் பெற உள்ள நிலையில் அவருக்கு ஏ.ஆர்.ரகுமான் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நடிகை சோபனா மற்றும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் உள்ளிட்டோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. நாளை நடைபெறும் உள்ள பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இந்த பட்டம் வழங்கப்படுகிறது.
இவர்களுடன் சேர்ந்து டாக்டர் பட்டம் பெறுவதில் மிகுந்த கௌரவம் என்று இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதனையடுத்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆஸ்கார் விருது வென்ற இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஐந்து பல்கலைக்கழகங்கள் வழங்கிய கௌரவ டாக்டர் பட்டங்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்