Categories: சமூகம்

7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!!

வெளியிட்டது
7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!! 1

‘வடகிழக்கு பருவமழை,தொடங்கி உள்ள நிலையில், ஏழு மாவட்டங்களில், இன்று(அக்.,19) கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் மற்ற இடங்களில், லேசான மழைக்கு வாய்ப்புள்ளது’ எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை, அக்.16ல் துவங்கியது. அன்று முதல் வங்க கடலில், வளிமண்டல மேல் அடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக , வட மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. இன்று, ஏழு மாவட்டங்களில், கன மழை கொட்டும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி: அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சியால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில், இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்