Categories: சமூகம்

புதுச்சேரியில் பலத்த மழை ! 24 மணிநேரத்தில் 7.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது !!

வெளியிட்டது
புதுச்சேரியில் பலத்த மழை ! 24 மணிநேரத்தில் 7.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது !! 1

புதுச்சேரி மாநிலத்தில் காலை முதல் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்துவரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று (நவ.22) காலை முதல் கனமழை பெய்யத்தொடங்கியது. சுமார் 3 மணிநேரத்திற்கும் மேலாக பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக நகரப்பகுதியில் உள்ள புஸ்ஸி வீதி, லெனின் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. கிராமப் பகுதிகளான மூலக்குளம், பாகூர், வில்லியனூர், கரிக்கலாம்பாக்கம், பத்துக்கண்ணு, திருக்கனூர் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது . தொடர் கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. புதுச்சேரியில் கடந்த 24 மணிநேரத்தில் 7.7 மி.மீ. மழை பதிவாகி உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்