அதிக ஊதியம் தரும் நகரம்!

இந்தியாவில் அதிகமான அளவில் ஊதியம் வழங்கும் நகரமாக பெங்களூர் இருப்பதாக ஆய்வு ஒன்றில் அறியப்பட்டுள்ளது.

பெங்களூர் ஐ.டி துறைகளுக்கு பெயர் போனது. இத்துறையால் பெங்களூருக்கு ஏகப்பட்ட வளர்ச்சி. அது மட்டுமின்றி இங்கு ஐ.டி துறைகளில் வளர்ச்சி பெருமளவு இருக்கிறது. ராண்ஸ்டாட் இன்சைட்ஸ் சேலரி ட்ரெண்ட்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில், தொடர்ந்து மூன்றாம் முறையாக பெங்களூர் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதிக ஊதியம் தரும் நகரம்! 1

ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய சராசரி 5.27 லட்சம் ரூபாயாக இருக்கிறது. இடைநிலை ஊழியர்களுக்கு 16.45 லட்சமாக இருக்கிறது. முதல்நிலை ஊழியர்களுக்கு 35.45 லட்சமாகவும் இருக்கிறது.

அதேபோல் பெங்களூருக்கு அடுத்தபடியாக, ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் இருக்கின்றன.

ஹைதராபாத்
ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய சராசரி 5 லட்சம் ரூபாயாக இருக்கிறது.

மும்பை
ஆரம்ப நிலை ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய சராசரி 4.59லட்சம் ரூபாயாக இருக்கிறது. இடைநிலை ஊழியர்களுக்கு 15.07 லட்சமாக இருக்கிறது. முதல்நிலை ஊழியர்களுக்கு 33.95 லட்சமாகவும் இருக்கிறது.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்