“என்னால மத்த கலைஞர்களுக்கும் கஷ்டம்” லைவ் வீடியோவில் உண்மைகளை உடைத்த ஹிமா பிந்து.!

வெளியிட்டது

‘இலக்கியா’ சீரியலில் இலக்கியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை ஹீமா பிந்து தான் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை தற்போது முதல் முறையாக வீடியோவில் பகிர்ந்து இருக்கிறார். இன்று லைவ் வீடியோவிற்கு வந்த அவர் தான் ஏன் சீரியலில் இருந்து விலகியதற்கான உண்மையான காரணங்களை பகிர்ந்து இருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில் நடித்து வந்தவர் நடிகை ஹீமா பிந்து. இவர் ஏற்கனவே கல்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இதயத்தை திருடாதே’ சீரியலின் மூலமாக அறிமுகமாகி ரசிகர்கள் பலரின் மனங்களை கொள்ளை கொண்டிருந்தார். இந்த நிலையில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘இலக்கியா’ சீரியலில் இலக்கியா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

"என்னால மத்த கலைஞர்களுக்கும் கஷ்டம்" லைவ் வீடியோவில் உண்மைகளை உடைத்த ஹிமா பிந்து.! 1
சீரியல் நன்றாக சென்று கொண்டிருந்தது. மேலும் கௌதம் இலக்கியாவின் ரொமான்ஸ் காட்சிகளுக்காகவே பலரும் இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று திடீரென சீரியலை விட்டு விலகுவதாக பிந்து அறிவித்திருந்தார். அவரின் இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. கனத்த இதயத்துடன் சீரியலை விட்டு விலகுவதாக பிந்து அறிவித்திருந்த நிலையில், தற்போது லைவ் வீடியோவில் பல உண்மைகளை அவர் உடைத்திருக்கிறார். அதில் தனக்கு படங்களின் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததால் சீரியல் மற்றும் படங்களில் என்னால் சரி சமமாக வேலை பார்க்க முடியவில்லை என்று கூறி இருக்கிறார்.


மேலும் பொதுவாக சீரியல்கள் மாதத்தின் முதல் 15 நாட்கள் அல்லது அடுத்த 15 நாட்கள் மட்டுமே எடுக்கப்படும். ஆனால் படங்கள் அப்படியில்லை. மாதம் முழுவதுமே கால்ஷீட் இருக்கும். இதனால் நாடகத்தில் தன்னால் சரியாக நடிக்க முடியவில்லை. தான் நடிக்க நேரம் ஒதுக்கும் சமயங்களில் மற்ற கலைஞர்களும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்கிறார்கள். இதனால் விடுமுறையே இல்லாமல் அவர்களும் ஓய்வில்லாமல் உழைக்கிறார்கள். இது தனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. எனவே தன்னால் ஷூட்டிங் கெடக் கூடாது என்கிற காரணத்தினால் தான் நான் இந்த சீரியலை விட்டு விலகுகிறேன்” என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார்.அவரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Trend Talks

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்