Categories: சினிமா

ஹிப்ஹாப் ஆதியின் 7வது படம்.! First Look போஸ்டருடன் பெயரை மாஸாக அறிவித்த படக்குழு.!

வெளியிட்டது

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக இருந்து இன்று இளம் நடிகராக மாறியுள்ளவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் தற்போது தனது ஏழாவது படத்தில் நடிக்க உள்ளார். அதற்கான பட பூஜை சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இன்று படத்தின் பெயரும், First Look போஸ்டரும் வெளியாகி இருக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தமிழர்களின் பெருமையை ராப் பாடல்களாக பாடி பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவர் ஆரம்பத்தில் இசையமைப்பாளராக பணியாற்றி வந்தார். பின்னர் 2017 ஆம் ஆண்டு இவர் “மீசைய முறுக்கு” என்ற படத்தின் மூலமாக அறிமுகமானார். இந்தப் படத்தில் இயக்குனராகவும், எழுத்தாளராகவும், நடிகராகவும் இவர் பணியாற்றினார். இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் அடுத்ததாக தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால், அன்பறிவு போன்ற படங்களில் நடித்தார்.

ஹிப்ஹாப் ஆதியின் 7வது படம்.! First Look போஸ்டருடன் பெயரை மாஸாக அறிவித்த படக்குழு.! 1

தற்போது அவர் வீரன் என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஐசரி கணேசின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பாக தற்போது தனது ஏழாவது படத்தில் கமிட்டாகி இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. வெந்து தணிந்தது காடு படத்தின் பிரம்மாண்டமான வெற்றியைத் தொடர்ந்து வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் அடுத்ததாக ஹிப் ஹாப் ஆதி கதாநாயகனாக வைத்து ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறது. பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி இருக்கிறது. இந்த படத்திற்கான பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தை கார்த்திக் வேணுகோபாலன் எழுதி இயக்குகிறார். இந்த படத்தை பெரிய பொருட் செலவில் ஐசரி கணேஷ் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் பட பூஜையுடன் தொடங்கியுள்ளது. பூஜையில் ஹிப்ஹாப் ஆதி, ஐசரி கணேஷ், நடிகர் பாண்டியராஜன், முனீஷ்காந்த், விஜய் டிவி ரியோ உள்ளிட்ட முக்கிய நபர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் படத்தின் பெயரும் First Look போஸ்டரும் இன்று வெளியாகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

அதே போல தற்போது போஸ்டர் வெளியாகியுள்ளது. PT சார் என்று படத்தின் பெயரும் கையில் பந்துகளுடன் கிரிக்கெட் பேட்டுடன் வித்தியாசமான கதாபாத்திரத்தில் உடற்கல்வி ஆசிரியராக மாறி இருக்கிறார் ஆதி.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்