Categories: சினிமா

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் விக்ரமன் மகன்.! ஹிட் லிஸ்ட் படத்தின் டீஸர் வெளியானது.!

வெளியிட்டது

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மற்றும் இயக்குனர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா ஆகியோர் நடித்திருக்கும் திரைப்படம் தான் ஹிட் லிஸ்ட். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி இருக்கிறது. தொடர்ந்து பல சுவாரஸ்யமான கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடித்து வெற்றியும் பெற்று வருகிறார் சரத்குமார். அந்த வகையில் அவர் நடித்த போர் தொழில் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தொடர்ந்து அதே போல் சிலை கடத்தல் கதையான பரம்பொருள் என்கிற படத்திலும் நடித்து முடித்து இருக்கிறார். அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் அவர் இயக்குனர் விக்ரமின் மகன் விஜய் கனிஷ்கா அறிமுகமாகும் ‘ஹிட் லிஸ்ட்’ என்கிற படத்திலும் தற்போது நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தை கே எஸ் ரவிக்குமாரின் தயாரிப்பு நிறுவனமான ஆர்கே செல்லுலாய்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஹீரோவாக அறிமுகம் ஆகும் இயக்குனர் விக்ரமன் மகன்.! ஹிட் லிஸ்ட் படத்தின் டீஸர் வெளியானது.! 1

இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரின் அசோசியேட் இயக்குனர்களாக இருக்கும் சூரியா கதிர் மற்றும் கார்த்திகேயன் ஆகிய இருவர் இணைந்து இந்த படத்தை இயக்கியிருக்கின்றனர். இந்த படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சமுத்திரகனி, முனீஷ் காந்த், சித்தாரா, ஐஸ்வர்யா தத்தா, பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சி சத்யா இசையமைக்க, ராம்சரண் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் ஆபிரகாம் படத்தொகுப்பு செய்கிறார் .தற்போது இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. விஜய் சேதுபதி இந்த டீசரை வெளியிட்டு சிறந்த ஆக்ஷன் படம் என்று பதிவிட்டிருக்கிறார்.

அதேபோல கே எஸ் ரவிக்குமாரும் டீசரை பார்த்துவிட்டு படக் குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்திருக்கிறார். படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த படம் ரிலீஸ் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் ஒரு பக்கா ஆக்ஷன் மற்றும் சைக்கோ திரில்லர் கதையில் சரத்குமார் நடித்திருக்கிறார். நீங்களும் தற்போது வெளியாக இருக்கும் அந்த டீசரைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Moviebuff Tamil

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்