தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகம் ஆகியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவரின் இசைக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. பல இளைஞர்களையும் தற்போதுவரை இவரது பாடல் குத்தாட்டம் போடவைத்து வருகிறது. அந்தளவுக்கு தனது பாடலால் ரசிகர்களை கட்டிப்போட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. இசையமைப்பாளராக இருந்த இவர் தற்போது நடிகர் இயக்குனர் என பல அவதாரங்களை எடுத்து உள்ளார்.

தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வரும் விஜய் ஆண்டனி,ஆரம்பத்தில் நல்ல படங்களை கொடுத்தாலும் தற்போது இவருக்கு படங்கள் சரியாக அமையவில்லை. இருப்பினும் மீண்டும் வெற்றிப்படங்களை கொடுக்க போராடி வருகிறார் விஜய் ஆண்டனி. அந்த வகையில் இவருக்கு அடுத்ததாக ஹிட்லர் படம் வெளியாக உள்ளது. இப்படத்தினை இயக்குனர் தனா இயக்கியுள்ளார்.
விவேக் மேர்வின் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.இப்படம் வருகிற செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில் இப்படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. ட்ரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.
Embed Video Credits : Star Music India