Categories: சினிமா

3 மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!!

வெளியிட்டது
3 மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!! 1

கனமழை காரணமாக, ராமநாதபுரம், சேலம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று மழையின் காரணமாக (அக்.,22) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. பலத்த மழை பெய்யும் சில மாவட்டங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பாதிப்படைந்துள்ளன. இதனால் இன்று (அக்.,22) இம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

இது போல் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுப்பு அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் அறிவித்துள்ளார்.தொடர் மழையின் காரணமாக சேலத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து, கலெக்டர் ராமன் உத்தரவிட்டுள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் கனமழையால் காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்