கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக வாழ்க்கையை தொடங்கியவர் விக்னேஷ் கார்த்திக். பின்னர் தொகுப்பாளராக சில வருடங்கள் சின்னத்திரையில் பயணித்து வந்தார். பின்னர் சின்னத்திரையில் பகல்நிலவு என்ற தொடரில் நடித்து நடிகராகவும் அறிமுகம் ஆகினார். பின்னர் சினிமாவில் இயக்குனர் ஆகவேண்டும் என பல குறும்படங்களை இயக்கி உள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் 2013ஆம் ஆண்டு ஏன்டா தலையில என்ன வைக்கல என்ற படத்தினை இயக்கி இயக்குனர் ஆக அறிமுகம் ஆகினார். பின்னர் திட்டம் இரண்டு மற்றும் அடியே படங்களையும் இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பினை பெற்று இருந்தது. பின்னர் இவர் இயக்கிய ஹாட்ஸ்பாட் படம் பலரையும் திரும்பி பார்க்க வைத்து உள்ளது.
இப்படம் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் விக்னேஷ் கார்த்திக். இப்படத்தினை விஷ்ணு விஷால் தனது தயாரிப்பில் வெளியிட உள்ளார். இப்படத்திற்கான அறிவிப்பு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் இப்படத்திற்கு ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : MOVIE BUFF TAMIL