ஜம்ப்கட்ஸ் என்ற யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமாகியவர் தான்ஹரி . இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த யூடியூப் சேனலில் தொடர்ந்து நகைச்சுவையாக நடித்து வீடியோ வெளியிட்டு அசத்தியிருந்தார். மேலும் பல குறும்படங்களை நடித்து இயக்கியும் உள்ளார் ஹரி. இவரது திறமைக்காக சரியான வாய்ப்பு கிடைக்கும் என காத்திருந்தார் ஹரி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.இயக்குனர் அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மிஸ்டர் ஹவுஸ்கீப்பர் படத்தில் நாயகனாக நடித்து உள்ளார். இப்படத்தில் இவருடன் ஜோடியாக லாஸ்லியா நடித்து உள்ளார். இப்படத்தின் முதல்பார்வை போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.
டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது. ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளனர். படம் ஜாலியாகவும் காமெடியுமாக இருப்பதாக ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
Embed Video Credits : SONY MUSIC SOUTH