இ. அ. மு. கு இரண்டாம் பாகம்! ஒரு பேண்டசி ஜானர் எடுக்க ஜெயக்குமார் முடிவு!!

வெளியிட்டது
இ. அ. மு. கு இரண்டாம் பாகம்! ஒரு பேண்டசி ஜானர் எடுக்க ஜெயக்குமார் முடிவு!! 1

நடிகர் கவுதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் ஆகியோர் நடிப்பில் வெளியான இருட்டு அறையில் முரட்டுக் குத்து என்ற படம் அடல்ட் காமெடி படமாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்து, படத்தின் இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார், கஜினிகாந்த் என்ற படத்தை இயக்கினார்.ஆனால் அது எதிர்பார்த்த அளவு இல்லை என்றாலும், தற்போது, புதுமுக நடிகர்-நடிகையருடன் இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க, சந்தோஷ் பி.ஜெயக்குமார் தயாராகி இருக்கிறார்.

படம் குறித்து இயக்குநர் சந்தோஷ் பி.ஜெயக்குமார் கூறுகையில்:
இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் எல்லா கமர்ஷியம் அம்சங்களும் இரண்டாவது பாகத்திலும் இருக்கும். பேண்டசி பாணியில் அற்புதமான கதைக்களத்துடன் படத்தை உருவாக்கப் திட்டமிட்டுள்ளேன்.

ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தில் நடித்தவர்கள் யாரையும், இரண்டாம் பாகத்தில் நடிக்க வைக்க போவதில்லை. எல்லோரையும் புதுமுகமாகப் போட்டு படத்தை எடுக்க முடிவெடுத்திருக்கிறேன். தேவையானால், இதில் சில மாற்றங்கள் இருக்கலாம். மற்றபடி, வழக்கமான கமர்ஷியல் படங்களில் ஒன்றாகவே இருட்டு அறையில் முரட்டுக் குத்து படத்தின் இரண்டாம் பாகமும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்