“நீ இப்படி கத்திகிட்டே இருந்தினா நான் மக்கை கொடுத்துகிட்டு மேடை விட்டு போய்க்கிட்டே இருப்பேன்” என்று இளையராஜா ரசிகர்களை பார்த்து ஒருமையில் பேசி இருக்கும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நேற்று வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் விடுதலை படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த இளையராஜா பேசிக் கொண்டிருந்தபோது ரசிகர்கள் கத்திக் கொண்டே இருந்ததால் பொறுமையை இழந்த இளையராஜா இவ்வாறு கோபத்தில் கூறியது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் திரையுலகில் இளையராஜாவுக்கு என்று ரசிகர்கள் தனி இடம் வைத்திருக்கிறார்கள். கிராமத்து மண் மனம் மாறாத இசையை கொடுத்து பலரின் உள்ளங்களில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார் இளையராஜா. இவர் இசைஞானி என்றும் பலரால் அன்போடு அழைக்கப்படுகிறார். 1970களில் தனது இசைப் பயணத்தை தொடங்கிய அவர், இன்று வரை இசை உலகின் தவிர்க்க முடியாத சக்தியாக இருந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போதும் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இளையராஜா. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை படத்திற்கும் அவர் இசையமைத்திருக்கிறார். இந்த படம் ஜெயகாந்தன் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த படம் இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் வைத்து நடைபெற்றது. இதில் இயக்குனர் வெற்றிமாறன், விஜய் சேதுபதி, நடிகர் சூரி, இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் பேசிய இளையராஜா திரை உலகம் இதுவரை பார்க்காத ஒரு களத்தில் நடக்கும் கதையாக இது இருக்கும், வெற்றிமாறன் இந்த திரை உலகிற்கு ஒரு முக்கியமான இயக்குனர், 1500 படங்களுக்கு இசையமைத்த பின்பு இந்தை நான் சொல்கிறேன். 1500 படங்கள் என்றால் 1500 இயக்குனர்களை பார்த்தவன் நான் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும், இந்த படத்தில் இதுவரை கேட்காத இசையை நீங்கள் கேட்பீர்கள் என்றும் இளையராஜா பேசிக் கொண்டிருந்தார்.
அவர் பேச்சுக்கு நடுவே திடீரென ரசிகர்கள் தொடர்ந்து விசில் அடித்தும் கத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஆனால் இளையராஜாவோ ரசிகர்கள் தொடர்ந்து கத்திக் கொண்டே இருந்ததால் நீங்கள் இப்படி கத்திக் கொண்டே இருந்தால் நான் மைக்கை கொடுத்துவிட்டு போய்க் கொண்டே இருப்பேன் என்று மிரட்டினார். இதையடுத்து ரசிகர்கள் அமைதியாகினர். பின்னர் இளையராஜா விடுதலை படத்தில் வந்த ஒரு பாடலை பாடி தனது பேச்சை முடித்தார். இளையராஜா ரசிகர்களை மிரட்டியதை பலரும் விமர்சித்து வருகின்றனர். ரசிகர்கள் என்றால் இப்படித்தான் மகிழ்ச்சியில் விசில் அடித்து கைதட்டி கொண்டாடுவார்கள். அதைக்கூட நீங்கள் குற்றமாக பார்க்கிறீர்கள் என்று அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். நீங்களும் அந்த வீடியோவை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: TN360