பிரபல ஓடிடி தளமான நெட்பிலிக்ஸ்ல் உருவான தொடர்தான் “ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ்”. இந்த தொடருக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கிலும் பல ரசிகர்கள் உண்டு. த்ரில்லர் தொடரில் முதலிடத்தில் இருந்தது என்று சொன்னால் அது மிகையில்லை. தற்போது இந்த தொடரின் 4வது சீசனுக்கு தமிழகத்தின் பிரபல இசையமைப்பாளரான மாஸ்ட்ரோ இளையராஜா அவர்கள் இசையமைத்துள்ளது இளையராஜா ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டுதான் Stranger Things தொடரின் முதல் சீசன் ஆரம்பிக்கப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் ஹாரார் அடிப்படையில் இந்த தொடர் வெளிவந்தது. இந்த தொடர் இவ்வளவு வெற்றியடைய மற்றொரு காரணம் இதற்கான இசைதான். தொடரின் தலைப்பு வரும்போது வரும் இசை தொடங்கி அனைத்துமே ரசிகர்களை ஈரத்துள்ளது என்று சொன்னால் அது மிகையில்லை. மேலும் இந்த தொடரில் நடித்த ஒவ்வொரு கதாபாத்திரம், சிறுவர்களாக இருந்தாலும் அவர்களின் நடிப்பு, கதை செல்லும் விதம் ஆகியவை ரசிகர்களுக்கு விறுவிறுப்பை கூட்டும். ஒரு எபிசோட் பார்த்து முடித்தவர்கள் அடுத்து என்ன நடக்கும்? என்று உடனே அடுத்த அடுத்த எபிசோடுகளை பார்க்கும் அளவிற்கு விறுவிறுப்பை எகிற செய்யும் தொடர். 2016, 2017, 2019 என மூன்று சீசன்கள் முடிந்துள்ள நிலையில் இன்று நான்காவது சீசன் வெளியாக உள்ளது. Twitter Original Source from: Ilaiyaraaja
தற்போது இந்த நான்காவது சீசனின் தீம் மியூசிக் இளையராஜாவின் தயாரிப்பில் உருவாகியுள்ளது தான் ஹைலைட். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் அறிவித்துள்ள நெட்ஃபிலிக்ஸ், மாஸ்ட்ரோவின் தீம் இசை நம் உலகத்தை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டது என்று பதிவிட்டு அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளது. மண் வாசனை கலந்து மட்டுமே இவரால் வாசிக்க முடியும் என்று விமர்சித்தவர்களுக்கு முன்னால், ஹாலிவுட் படங்களுக்கும் தன்னால் இசையமைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார் இளையராஜா. அவரின் இசையை நீங்களும் காண..Watch the below Video..