Categories: சினிமா

வீடியோவில் கண்கலங்கி பேசிய இளையராஜா.! மனுஷன் ரொம்ப உடைஞ்சு போய்ட்டாரு.! என்ன காரணம் தெரியுமா?

வெளியிட்டது

இளையராஜா தற்போது கண் கலங்கி உருக்கமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் தற்போது வேகமாக பரவி வருகிறது. தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர்களில் உச்ச இடத்தில் இருப்பவர் இளையராஜா. இன்று வரை இவர் இடத்தை யாராலும் இட்டு நிரப்ப முடியாமலே இருந்து வருகிறது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக இசைத் துறையை தன் வசம் வைத்திருக்கும் இளையராஜா, தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசியிருக்கிறார். தமிழ் இசைத்துறையின் மற்றொரு அடையாளமாக இருப்பவர் எஸ் பி பாலசுப்ரமணியம். இவரும் இளையராஜாவும் இணைந்து பணியாற்றிய இளைய நிலா பொழிகிறது என்கிற பாடல் இன்றளவும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இளையராஜாவின் மெல்லிய இசையும் எஸ்பிபி யின் அழகிய குரலும் இந்த பாடலுக்கு வலு சேர்த்தது என்று சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக இந்தப் பாடலில் நடிகர் மோகன் கிட்டார் வாசிப்பது போன்று வீடியோ காட்சி எடுக்கப்பட்டிருக்கும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வீடியோவில் கண்கலங்கி பேசிய இளையராஜா.! மனுஷன் ரொம்ப உடைஞ்சு போய்ட்டாரு.! என்ன காரணம் தெரியுமா? 1
அந்தப் பாடலுக்கு உண்மையாக கிட்டார் வாசித்தவர் கே சந்திரசேகர். மிக தத்ரூபமாக இருக்கும் காட்சியில் மோகன் மிக அழகாக நடித்திருப்பார். இந்த பாடல் உருவான விதம் குறித்து சமீபத்தில் கே சந்திரசேகர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். முதலில் இந்த பாடல் சலவை நிலா என்று இருந்தது. பின்னர் கங்கை அமரன் இதை இளைய நிலா என்று மாற்றினார். இந்த பாடல் இரண்டு மணியில் இருந்து 9 மணி வரை ஜெமினி ஸ்டுடியோவில் நடக்க வேண்டியதாக இருந்தது. இளையராஜாவே ஸ்வரம் போட்டு கொடுத்ததால் என்னுடைய வேலை மிகவும் எளிதாக இருந்தது. ஆனால் கடைசியாக வந்தது அவர் ஸ்வரம் போட்டது கிடையாது. தானே தயார் செய்தது. இந்தப் பாடலுக்காக பல லட்சம் ரூபாய் மதிப்பிற்கும் பாடகர்கள் உபயோகிக்கும் மைக்கை பயன்படுத்தினோம். முதல் டேக்கிலேயே இளையராஜா இதுவே போதும் என்று சொல்லிவிட்டார். அதை பார்த்து அங்கிருந்து அனைவரும் கைத்தட்டினர். ஆறு மணிக்கு தொடங்கிய இந்தப் பாடலின் பதிப்பு 7 மணிக்கு எல்லாம் முடிந்துவிட்டது. ஒரே டேக்கில் முடிவான பாடல் அது. ஆனால் இது இவ்வளவு ஹிட் ஆகும் என்று யாருக்குமே தெரியாது என்று பேசி இருந்தார்.

பல ஆண்டுகளாக இன்றும் இளமையுடன் இருக்கும் அந்த பாடலுக்கு கிட்டாரிஸ்டாக இருந்த கே.சந்திரசேகர் சமீபத்தில் காலமானார். அவருக்கு தற்போது 79 வயது ஆகிறது. இந்த நிலையில் அவர் மறைவுக்கு இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு உருக்கமாக பேசியிருந்தார். அதில் அவர், “என்னுடன் பணியாற்றிய எனக்கு பிரியமான இசை கலைஞரான சந்திரசேகரன் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன்.அவர் என்னிடம் பணியாற்றிய புருஷோத்தமனின் சகோதரர். நாங்கள் அனைவருமே மேடையில் இருந்து பின்னர் திரைத்துறைக்கு வந்தவர்கள். அவர் என்னுடன் பல பாடல்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அந்தப் பாடல்கள் எல்லாமே மக்கள் மனதில் என்றும் நீங்காமல் இருக்கின்றன. அவருடைய இறப்பினால் வருத்தம் அடைகிறேன். அவருடைய ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று அவர் பேசியிருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது நீங்களும் அந்த வீடியோவை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!

 

YouTube Video Embed Code Credits: Viral Videos 3.O

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்