சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘இலக்கியா’ சீரியலில் இருந்து நடிகை பிந்து விலகி இருந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக புதிய நடிகை ஒருவர் நடிக்க இருக்கிறார். அதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இலக்கியா சீரியல் மக்களின் மனம் கவர்ந்த சீரியலாக இருந்து வருகிறது. இதில் நடிகர் நந்தன் லோகநாதன் ‘கௌதம்’ என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வர, நடிகை ஹீமா பிந்து இலக்கியவாக நடித்திருந்தார். தற்போது ஹீமாவிற்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது வருகிறது. இதனால் அவர் ‘இலக்கியா’ சீரியலை விட்டு விலக நேர்ந்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்திருந்த ஹீமா பிந்து, “தன்னால் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை இரண்டையும் சரிவர பேலன்ஸ் செய்ய முடியவில்லை. தான் ஷூட்டிங் வரும் நேரம் பார்த்து விடுமுறையில் இருக்கும் மற்றவர்களும் ஷூட்டிங் வரும்படியாக இருக்கிறது. எனவே என்னால் யாருக்கும் சிரமம் வேண்டாம், நான் சீரியலில் இருந்து விலகிக் கொள்கிறேன்” என ஹீமா அறிவித்திருந்தார். இந்த நிலையில் அடுத்து யார் இலக்கியாவாக நடிக்கப் போகிறார்? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. சில நாட்களுக்கு முன்பு தொகுப்பாளினியும், நடிகையுமான சாம்பவி குருமூர்த்தி இலக்கியாவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது அவர்தான் நடிக்க இருப்பதாக புது ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
சாம்பவி குருமூர்த்தி சன் தொலைக்காட்சியில் பிரபல நிகழ்ச்சியாக இருக்கும் ‘வணக்கம் தமிழா’ போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். மேலும் ‘கேளடி கண்மணி’, ‘செவ்வந்தி’ போன்ற சீரியல்களிலும் நடித்திருக்கிறார். ‘கயல்’ சீரியலின் தெலுங்கு பதிப்பான ‘சாதனா’ சீரியலில் கயலாக நடித்து வந்தார் சாம்பவி. அந்த சீரியல் பாதியிலேயே முடிக்கப்பட்ட நிலையில், தற்போது ‘இலக்கியா’ சீரியலில் புது இலக்கியவாக நடிக்க இருக்கிறார். அந்த ப்ரோமோவை நீங்களும் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Saregama TV Shows Tamil