Categories: உலகம்

அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா!!

வெளியிட்டது
அறிவியல் கட்டுரைகள் எழுதுவதில் உலகில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியா!! 1

அறிவியல் கட்டுரைகள் அதிகளவு ஆர்வம் காட்டி வரும் நாடுகளில் இந்தியா மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. அறிவியல் கட்டுரைகளை அதிக அளவில் வெளியிடும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை சமீபத்தில் வெளியிட்டது.

அதில் இந்தியாவிற்கு 3-வது இடம் கிடைத்துள்ளது. அந்த அறக்கட்டளை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின் அடிபடையில், அறிவியல் மற்றும் விஞ்ஞான கட்டுரைகளில் 20.67% வெளியிட்டு சீனா முதலிடம், 16.54% கட்டுரைகளை வெளியிட்டு அமெரிக்கா 2-வது இடத்திலும் உள்ளன. இந்த இரு நாடுகளை அடுத்து இந்தியா 3-வது இடம்பெற்ற நாடாக உள்ளது.

உலகளாவிய அறிவியல் வெளியீடுகளின் எண்ணிக்கை 2008-ஆம் ஆண்டு சீனாவில் 2,49,049 ஆக இருந்தது, 2018-ல் 5,28,263 ஆக உயர்ந்திருக்கிறது. இது கிட்டத்தட்ட ஆண்டிற்கு 7.81 சதவீத விகிதத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது. அதனை அடுத்து அமெரிக்காவின் கட்டுரைகளில் மொத்த உலகளாவிய வெளியீடுகள் 2008-ல் 3,93,979 லிருந்து 0.71 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ந்து 2018-ல் 4,22,808 ஆக உயர்ந்தது. மேலும் இந்தியா 2008-ம் ஆண்டில் 48,998 கட்டுரைகளை வெளியிட்டுள்ள நிலையில் 2018-ம் ஆண்டின் எண்ணிக்கை 1,35,788 கட்டுரைகளாக அதிகரித்துள்ளது.

அறிவியல் கண்டுபிடிப்பு கட்டுரைகள் வெளியீடுகளை பொறுத்தவரை அமெரிக்கா மற்றும் சீனாவை ஒப்பிடும் போது இந்தியா இன்னும் பல மடங்கு கட்டுரைகளை வெளியிட வேண்டியுள்ளது. மேலும் அறிவியல் மற்றும் பொறியியலில் மொத்த உலக வெளியீடுகளில் 5.31 சதவீத கட்டுரைகள் இந்தியாவிலிருந்து வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்