Categories: உலகம்

இந்தியா-நேபால் இடையே புதிய சோதனை சாவடி

நேபால் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே எல்லைப் பகுதியில் சோதனை சாவடிகளை இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக திறந்து வைத்தனர்.

இந்தியா-நேபால் இடையே புதிய சோதனை சாவடி 1
பிரதமர் மோடி

இந்தியாவின் எல்லையோர நாடான நேபாள் அதோடு வர்த்தக தொடர்பை அதிகரிக்கவும் மக்களுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதே போல இந்தியாவும் நேபாளமும் சாலை, ரயில் போக்குவரத்து உள்ளிட்ட எல்லை தாண்டிய போக்குவரத்து தொடர்பான திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி வருகின்றன.

அதன் அடிப்படையில் இரு நாட்டு எல்லையில் அமைந்துள்ள ராக்சௌல்-பீரகஞ்ச் பகுதியில் கடந்த 2010ம் ஆண்டு சோதனைச்சாவடி திறக்கப்பட்டது.

இந்நிலையில் ஜோக்பானி-பீரத்நகர் பகுதியில் அமைந்துள்ள இரண்டாவது சோதனை சாவடியை பிரதமர் மோடியும் நேபாள பிரதமர் சர்மாவும் காணொளி மூலம் கூட்டாக திறந்து வைத்தனர்.

விடுதலை தமிழ்முரசு

Senior Editor - TamilGlitz சமூக அரசியல் பொருளாதாரம் குறித்தான ஆர்வம் அதிகம். மின்னம்பலத்தில் தொடங்கிய பயணம் ஐபேக் வழியாக இங்கு! As a Tamil news enthusiast with a knack for uncovering the hidden political drama behind the glitzy entertainment scene, I'm your source for the juiciest stories and insightful analysis. #விடுதலை

புதிய செய்திகள்