குடியுரிமை மசோதா நிறைவேற்றப்படுமானால் “பாகிஸ்தானின் பார்ப்பனிய மறுஉருவமாக” மாறும். அது மட்டுமின்றி இந்துக்கள் உரிமை கோரும் பெருமிதம் கொண்ட வரலாற்று மரபுக்கு எதிரானது என காங்கிரசின் சசி தரூர் விமர்சித்துள்ளார்.

குடியுரிமை மசோதா தொடர்பான விவாதங்கள் பாராளுமன்றத்தில் இயற்றப்பட இருக்கிறது. எனவே இது குறித்து பிடிஐ நிறுவனத்திடம் பேட்டி அளித்த மக்களவை உறுப்பினரும், காங்கிரசின் மூத்த தலைவருமான சசி தரூர், “இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் காந்தியை முகமது அலி ஜின்னா வென்றாக கருதப்படும் என தெரிவித்தார்.
இந்த மசோதா குறித்து மேலும் அவர் கூறுகையில், “பாஜக அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை வெளியேற்ற நினைக்கிறது. அது மட்டுமின்றி அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறையையும், அவர்களின் உரிமையை மறுக்கிறது. இந்த மசோதா இரு அவையிலும் நிறைவேற்றப்பட்டாலும், இது போன்ற அப்பட்டமான விதிமீறல்களை எந்த ஒரு நீதிமன்றமும் அனுமதிக்காது என்ற நம்பிக்கையுள்ளது.
தனிநபர் மசோதாவாக தேசிய அகதிகள் மசோதா கொண்டு வந்த போது அதனை விவாதிக்க கூட மறுத்தவிட்டது. இது ஒரு வெட்கமில்லாத அரசாக செயல்பட்டு வருகிறது. ஒரு தனி சமூகத்தை விலக்கி வைக்கும் இழிவான அரசியலை பாஜக வருகிறது. இதன் போக்கு பண்மைமிக்க இந்தியாவின் நாகரிகத்தை காட்டிக்கொடுக்கும் செயல். இதன் நீட்சியாக இந்தியா “பார்ப்பனீய பாகிஸ்தானின் மறுபதிப்பக” உருமாறும்” இவ்வாறு சசி தரூர் தெரிவித்தார்.