Categories: சமூகம்

ஜெர்மனி மாணவரை திருப்பி அனுப்பிய இந்திய குடியுரிமை அதிகாரிகள்! போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்!!

வெளியிட்டது
ஜெர்மனி மாணவரை திருப்பி அனுப்பிய இந்திய குடியுரிமை அதிகாரிகள்! போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்!! 1

மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தெரிவித்து பரப்பான சூழல் காணபடுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த போராட்டம் வட இந்தியா மட்டுமன்றி தென் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த 19 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டம் பகுதியில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டங்கள் நடந்தது. இந்த போராட்டத்தில், சென்னையில் ஐஐடி கல்லூரியில் பயின்று வரும் ஜெர்மனி நாட்டைச்சேர்ந்த மாணவரும் பங்கேற்று, அரசை விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, சென்னை ஐஐடியில் பயிலும் ஜெர்மன் மாணவரின் அனுமதியை ரத்து செய்த இந்திய குடியுரிமை துறை ஜெர்மனிக்கு திருப்பி அனுப்பியது.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்