இது வேற லெவல் ப்ரோமோஷன்!!ஐபில் இறுதி போட்டியில் வெளியாகும் படத்தின் ட்ரைலர்!!!

வெளியிட்டது

படங்களும், விளம்பரங்களும் பெரிதாகி வரும் நிலையில் இப்பொது அதற்கான விளம்பரப்பிகளும் நூதனமான முறையில் செயல்பட துவங்கியுள்ளன. விமானங்களில் விளம்பரம் செய்வது, துபாயிலுள்ள புர்ஜ் காலிஃபா கட்டடத்தில் விளம்பரம் என பல முறைகளிலும் விளம்பரங்கள் நடைபெற்று வருகிறது.

இந்தியாவில் மிக பெரிய போது ஈர்ப்பு விஷயங்கள் ரசிகர்களுக்கு என்றால் கிரிக்கெட் விளையாட்டும், சினிமாவும் தான். நெருங்கிய தொடர்பில் இருக்கும் இது இரண்டும் எப்போதும் மக்களிடம் ஒரு வித எதிர்ப்பார்ப்பை கொண்டே இருக்கிறது.

இது வேற லெவல் ப்ரோமோஷன்!!ஐபில் இறுதி போட்டியில் வெளியாகும் படத்தின் ட்ரைலர்!!! 1

சினிமாத்துறையில் உள்ள பலரும் கிரிக்கெட் வீரர்களுடனும் நட்பு பாராட்டி வருகின்றனர். கிரிக்கெட் வீரர்களும் அவ்வாறே இருக்கின்றனர். இந்நிலையில் ஒரு படத்தின் ட்ரைலர் நடந்து வரும் ஐபில் தொடரின் இறுதிப்போட்டியில் வெளியாக இருக்கிறது.

பாகுபலி படங்கள் வெளியாகி வெற்றியடைந்த முதல் கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர். படங்கள் பெரிய வசூலை ஹிந்தியில் அள்ளின. பிரபாஸ் நடிப்பில் வெளியான சாகோ படம் தெலுங்கில் தோல்வி படம் என்றாலும் ஹிந்தியில் மட்டும் 400 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்பொது வெளியாகியுள்ள  கே.ஜி.எஃப், ஆர்.ஆர்.ஆர். படங்கள் கிட்டத்தட்ட 400 கோடிக்கு மேல் அங்கு வசூல் வேட்டை நடித்து உள்ளது.

குறிப்பாக ஹிந்தியில் 3 கான்கள் – ஆமிர்கான், சல்மான் கான், ஷாருக் கான் என மூவரும் பெரிய வெற்றி படங்கள் கொடுத்து 3 வருடங்கள் மேல் ஆகிவிட்டது. குறிப்பாக இப்போதைய தென்னிந்திய படங்களின் ஆதிக்கத்தால், கடும் விமர்சனத்தை அவர்கள் சந்தித்து வருகின்றனர்.

ஆனால் இன்னும் ஆமிர்கான் நடித்த “டங்கள்” படத்தின் 2000 கோடி வசூலை இன்னுமும் தென்னிந்திய படங்கள் முறியடிக்க முடியவில்லை. அந்த அளவிற்கு அவர்களின் படங்களின் வியாபாரம் இருக்கிறது.

இப்பொது ஆமிர் கான் நடிப்பில் உருவாகி வரும் “லால் சிங் சாத்தா” படத்தை பாலிவுட் பெரிதும் நம்பியுள்ளது. ஹாலிவுட்டில் வெளியான “பாரஸ்ட் கம்ப்” என்ற படத்தின் ரீமேகாக உருவாகியுள்ள இந்த படம், இப்பொது அங்குள்ள ரசிகர்களின்  பெரிய எதிர்பார்ப்பில் உள்ளது.

அந்த படத்தின் ட்ரைலரை தான் இப்பொது நடைபெற்று வரும் ஐபில் போட்டியின் இறுதி போட்டியின் டைம் ப்ரேக் நடுவில் வெளியிட உள்ளனர். அனைத்து இந்திய ரசிகர்களையும் கவரவும், படத்தின் வசூலை பெரிதுப்படுத்தவும் இந்த ஒரு நூதன யுக்தியை அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்