Categories: சினிமா

விக்ரம் பிரபு, விதார்த் நடித்துள்ள ‘இறுகப்பற்று’ படத்தின் ட்ரைலர் வெளியானது.!

வெளியிட்டது

நடிகர் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கும் ‘இறுகப்பற்று’ படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மாயா, மாநகரம், மான்ஸ்டர், மற்றும் டாணாக்காரன் போன்ற நல்ல படங்களை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் தற்போது விக்ரம் பிரபுவை வைத்து ‘இறுகப்பற்று’ என்கிற படத்தை தயாரித்திருக்கிறது. இந்த படத்தை எலி, தெனாலிராமன் உள்ளிட்ட படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் விக்ரம் பிரபு உடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், விதார்த், ஸ்ரீ, அபர்நிதி, சானியா ஐயப்பன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

விக்ரம் பிரபு, விதார்த் நடித்துள்ள 'இறுகப்பற்று' படத்தின் ட்ரைலர் வெளியானது.! 1
காதலிக்கும் பொழுது இருக்கும் அன்பு திருமணத்திற்கு பின்னர் குறைந்து போவது குறித்து இந்த ட்ரைலர் பேசுகிறது. திருமணத்திற்கு பின்னான உறவில் ஏற்படும் சிக்கல்களை குறித்து விவரிக்கிறது இந்த ட்ரைலர். கணவன் மனைவி இரண்டு பேரும் சண்டை போடுவதற்கு காரணம் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. அவர்கள் கணவன் மனைவியாக இருக்கிறதே காரணம்தான் என்கிற வசனங்கள் கவனம் பெறுகிறது. வெவ்வேறு சூழ்நிலையை கொண்ட மூன்று ஜோடிகளின் வாழ்க்கை பிரச்சனையை இந்த படம் பேசுகிறது. இந்த படம் வருகிற அக்டோபர் ஆறாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.


இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். நீங்களும் அந்த வீடியோவைக் காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவைப் பார்க்கவும்..! Watch the Below Video..!

YouTube Video Embed Code Credits: Potential Studios

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்