Categories: சினிமா

‘இருட்டு’ தமிழ் திரையுலகில் புது பாணியில் பேய் படம்! சுந்தர்.சி!!

வெளியிட்டது
‘இருட்டு’ தமிழ் திரையுலகில் புது பாணியில் பேய் படம்! சுந்தர்.சி!! 1

சாக்‌ஷி சவுத்ரி, வி.டிவி. கணேஷ், விமலா ராமன், யோகிபாபு, சாய் தன்சிகா ஆகியோரும் நடித்து வரும் இருட்டு என்ற படத்தில் கிரிஷ் இசையமைத்துள்ளார். படக்குழுவினர் சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது சுந்தர்.சி பேசுகையில்,

“நீண்ட இடைவெளிக்கு பிறகு இன்னொரு இயக்குனர் படத்தில் கதாநாயகனாக நடித்து இருக்கிறேன். நான் செய்யும் படங்கள் எல்லாவற்றிலும் மக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில் விஷயங்கள் இருக்கும். முழுக்க பயப்படுகிற மாதிரி ஒரு படம் எடுக்கலாம் என்று முடிவு செய்து இந்த படத்தை உருவாக்கி உள்ளோம். துரை திறமையான இயக்குனர். இருட்டு படத்தை சிறப்பாக எடுத்துள்ளார்.

இந்தப்படம் புதுமாதிரியான பேய் படமாக இருக்கும். நானே பார்த்து பயந்து விட்டேன். ஒவ்வொரு காட்சியும் சீட் நுனிக்கு இழுக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் முத்த காட்சியும் நெருக்கமான காட்சிகளும் உள்ளன. கதைக்கு தேவை என்பதால் முத்த காட்சியில் நடித்தேன். படுக்கை அறை காட்சிகளை படமாக்கியபோது எனது மனைவி படப்பிடிப்புக்கு வந்து இருந்தார்.

அப்போது இயக்குனர் அதிக டேக்குகள் எடுத்து அந்த காட்சிகளை படமாக்கியது தர்ம சங்கடமாக இருந்தது. ”இவ்வாறு சுந்தர்.சி கூறினார்.

Vinoth Kumar

தன்னம்பிக்கை தான் வெற்றிக்கு முக்கியமாகும் 😎😎😎 பேனா 🖊️ மை உலகை மாற்றும் As a digital journalist born and raised in Tamil Nadu, I'm on a mission to leverage the digital age to bring you the most relevant and personalized news coverage, all while staying true to our Tamil roots.

வெளியிட்டது

புதிய செய்திகள்