Categories: சினிமா

ராஜமௌலியால் யோசனையில் மணிரத்னம்!!!மீண்டும் படமாக்க படும் பொன்னியின் செல்வன்.

வெளியிட்டது

இந்திய திரையுலகில் இப்பொது தென்னிந்திய படங்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. குறிப்பாக ராஜமௌலின் பாகுபலி படங்கள் வெளியாகி ஒட்டுமொத்த திரையுலகையும் ஆட்கொண்ட நிலையில், தொடர்நது வெளியான ஆர்.ஆர்.ஆர்., கே.ஜி.எஃப் போன்ற படங்கள் பாலிவுட் மார்க்கெட்டிலேயே மாபெரும் வசூல் சாதனையை புரிந்தன. இது அங்குள்ள பல முன்னணி இயக்குனர்களில், நாயகர்களுக்குமே தலைவலியாகி உள்ளது.

ராஜமௌலியால் யோசனையில் மணிரத்னம்!!!மீண்டும் படமாக்க படும் பொன்னியின் செல்வன். 1

இந்நிலையில், தமிழ் திரையுலகின் முத்த இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மாபெரும் பொருட்செலவில் தயாராகியுள்ள படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை படமாக பல நாயகர்களும் இயக்குனர்களும் போராடி உள்ளனர். எம்.ஜி.ஆர் ஆசைப்பட்ட இந்த கல்கியின் தொடர் பின்னர், புராதான கதைகளை கொண்டு படம் எடுத்து வரும் இயக்குனர் மணிரத்தினத்திற்கும் பெரிய ஆவல் இருந்தது. நடிகர் விஜயிடமும், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவிடனும் பேச்சு வார்த்தை கூட நடந்தது.

ஆனால் சில காரணங்களால் கைவிடப்பட்டு இப்பொது மீண்டும் மணிரத்னம் இயக்கத்திலேயே விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா ராய், திரிஷா என நட்சத்திர பட்டாளத்துடன் இந்த படம் தயாராகி வருகிறது. தமிழ் திரையுலகில் இருந்து பாகுபலிக்கு போட்டியாக உருவாகிறது என எதிர்பார்க்கும் பலருக்கும் இந்த படம் எடுக்க கஷ்ட பட்ட வரலாறு தெரியாது.

இருப்பினும் இப்போது அந்த போட்டியை தவிர்க்க முடியவில்லை. தனெக்கென ஒரு ஸ்டைல் கொண்டு இந்திய சினிமாவின் உச்சியில் இருந்த மணிரத்னம் பெரிய வெற்றி பெற்று சில ஆண்டுகள் ஆகிவிட்டது. நடுவில் ஓ காதல் கண்மணி வெற்றிப்படமாக அமைந்தாலும் கடல், காற்று வெளியிடை போன்ற பண்டங்கள் பெருத்த அடியை கொடுத்தது. இதனால் அவரும் இந்த படத்தின் மூலம் தன்னை நிரூபிக்கும் கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.

மிக பெரிய எதிர்பார்ப்பு, பெரிய கடமை, பெரிய போட்டி என பல வழியிலும் பிரேசனிக்கு நடுவில் வெளியகிபா உள்ள இந்த படத்திற்கு அண்மையில் இயக்குனர் மணிரத்னம் ரீ-ஷூட் செய்ய இருப்பதாக செய்திகள் வளம் வளரத்தொடங்கின. படத்தை எடிட்டிங் சமயத்தில் பார்த்த மணிரத்னத்திற்கு கொஞ்ச காட்சிகளை மெருகேற்ற வேண்டும் என தோன்றியதால் படம் மீண்டும் ஷூட்டிங்கிற்கு செல்கிறது எனவும் பரபரப்பாக பேசப்பட்டது.

ஆனால் இப்பொது அவ்வாறெல்லாம் இல்லை, அது வெறும் புரளியை என தயாரிப்பு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் அறிவித்தப்படி செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் என்வும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இந்த படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.

படத்தில் நடிக்கும் நடிகர்களின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ஏற்கனவே பெரும் எதிர்ப்பார்ப்பை கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் படத்திலிருந்து முதல் பாடல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்